நடிகர் சிவக்கார்த்திகேயன் பத்மஸ்ரீ கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸுடன் இணைந்து படம் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. பொங்கலுக்கு சிவக்கார்த்திகேயனின் அயலான் படம் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான புரோமோசன் வேலைகள் மிகவும் மும்முரமாக நடந்து வருகின்றது. இதற்கு இடையில் சிவக்கார்த்திகேயனின் 21வது படத்திற்காக தனது ஹேர் ஸ்டைலை முற்றிலுமாக மாற்றியுள்ளார். இதில் சிவக்கார்த்திகேயன் பார்ப்பதற்கு கல்லூரியில் இணையும் முதலாம் ஆண்டு மாணவர் போல உள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் லைக்குகளையும் ஃபையர்களையும் பறக்க விட்டு வருகின்றனர். சிவகார்த்திகேயனின் 21வது படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார்.