ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படம் வெளியாவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மதராஸி படத்தின் சிறப்பு காட்சிகள் முடிந்து படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளன. 

Continues below advertisement

மதராஸி விமர்சனம் 

"ஏ.ஆர் முருகதாஸ் எப்போதும் போல் தனது தனித்துவமான ஹீரோவாக சிவகார்த்திகேயனை இயக்கியுள்ளார். ரோமான்ஸ் , ஆக்‌ஷன்  என முதல் பாதியில் கதையை கட்டமைக்கிறார். ஒரு சில வழக்கமான காட்சிகள் , பாடல்கள் படத்திற்கு பின்னடைவாக அமைகின்றன. வித்யுத் ஜம்வாலின் அறிமுக ஆக்‌ஷன் காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் புதுமை காட்டியிருக்கிறார். அனிருத்தின் பாடல்கள் பெரியளவில் இல்லை என்றாலும் பின்னணி இசையில் பலம் சேர்க்கிறார். இடைவேளை ஆக்‌ஷன் காட்சி ஹைப் ஏற்றுகிறது. " என மதராஸி படம் பற்றி பெரும்பாலான விமர்சனங்கள் கூறுகின்றன. 

Continues below advertisement

திட்டமிட்ட நெகட்டிவ் விமர்சனங்கள்

மறுபக்கம் பிற நடிகர்களின் ரசிகர்கள் மதராஸி படத்திற்கு திட்டமிட்டு நெகட்டிவ் விமர்சனங்களைப் பரப்பி வருகிறார்கள். இன்னும் சிறப்பு காட்சிகள் முடிவதற்கு முன்பாக படம் சொத்தப்பல் என சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. முருகதாஸ் இந்தியில் இயக்கிய சிகந்தர் படம் பரவாயில்லை என பலர் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் முதல் காட்சியிலேயே படத்திற்கு திரையரங்கில் கூட்டமே இல்லை என சிலர் பதிவிட்டு வருகிறார்கள். முதல் காட்சிகள் முடிவடைந்து விமர்சகர்களின் கருத்தே மதராஸி படம் எப்படி இருக்கிறது என்பதை உறுதி செய்யும்