நான் என்ன குட்டி தளபதியா என்ன தி கோட் திரைப்படத்தில் விஜயிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிய பின் வந்த விமர்சனங்களுக்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் மனம் திறந்து பேசியுள்ளார்.
மதராஸி டிரெய்லர் வெளியிட்டு விழா:
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது, இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், ருக்மணி வசந்த மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பங்கேற்றனர்.
சிவகார்த்திக்கேயன் பேச்சு:
இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன் என் அப்பாவின் பெயரில் முருகதாஸ் இருப்பதாக பேசினார், மேலும் என் தந்தைக்கு ரமணா படம் பிடிக்கும் என்றும் அவர் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பார் என்று எமோஷ்னலாக பேசியிருந்தார்.
துப்பாக்கி கைக்கு வந்தது பற்றி:
தொடர்ந்து பேசிய சிவகார்த்திக்கேயன் தி கோட் படத்தில் இடம்பெற்ற அந்த துப்பாக்கி காட்சி குறித்து பேசிய சிவகார்த்திக்கேயன் விஜய் சார் கூட அந்த சீன்ல நடிச்சதுக்கு பிறகு நிறைய பேர் பாராட்டுனாங்க சிலர் விமர்சனமும் வச்சாங்க.
நான் இதை எப்படி எடுத்துக்கொள்வேன் என்றால் நல்லா பண்ற தம்பி, இன்னும் நல்லா பண்ணு என்று விஜய் சார் தட்டிக்கொடுத்த மாதிரி நினைத்து தான் எடுத்துக்கொண்டேன் என்றார்.
ஒரு சிலர் இவர் அடுத்த தளபதி, குட்டி தளபதி, திடீர் தளபதி என்றெல்லாம் விமர்சனம் பண்றாங்க, நான் அப்படி கருதும் ஆளாக இருந்தால் விஜய் சார் தன்னிடம் துப்பாக்கியை கொடுத்து இருக்கமாட்டார், நானும் வாங்கி இருக்கமாட்டேன், அண்ணன் அண்ணன் தான், தம்பி தம்பி தான் என்று சிவகார்த்திக்கேயன் பேசி முடித்தார்.