Ayalaa Ayalaa Song: ஏலியனுடன் ஜாலி நடனமாடும் சிவகார்த்திகேயன்.. ‘அயலான்’ இரண்டாவது பாடல் ரிலிஸ்!

Ayalaa Ayalaa: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் இரண்டாம் பாடலான ‘அயலா அயலா' வெளியாகியுள்ளது

Continues below advertisement

சிவகார்த்திகேயன்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக போட்டியாளராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது குடும்பங்கள் கொண்டாடும் ஒரு நடிகராக உருவாகி இருக்கிறார். வயதானவர்கள், குழந்தைகள், மத்திய வயதினர் என அனைத்து தலைமுறையைச் சேர்ந்தவர்களும் சிவகார்த்திகேயனை திரையில் பார்த்து ரசிக்கிறார்கள்.

Continues below advertisement

ஒரு பக்கம் மாஸான கதைகளில்  நடித்து வரும் சிவகார்த்திகேயன் மறுபக்கம் மாறுபட்ட கதைகளில்  நடிக்கத் தயாராக இருக்கிறார். இதில் சில படங்கள் பெரிய வெற்றியை தொடுவதில்லை, சில படங்கள் மிகப்பெரிய வெற்றியடைகின்றன. அப்படி மிகப்பெரிய ஒரு வெற்றிப் படமாக அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் ஒரு படம்தான் அயலான்.

அயலான்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் (Ayalaan) திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள் . ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே. ஜே .ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஏலியன் ஃபேண்டசி படமாக உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தில் வரும் ஏலியனுக்கு, நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தth தகவலை படக்குழு சமீபத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.   

அயலான் இசைவெளியீடு

அயலான் படத்தின் முதல் பாடலான வேற லெவல் சகோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானதைத் தொடர்ந்து, தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. அயலான் படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி வரும் டிசம்பர் 26ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இசை வெளியீடு படத்தின் இசையமைப்பாளரான ஏ. ஆர் ரஹ்மானின் இசையுடன் நடைபெற இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

அயலா அயலா

தற்போது வெளியாகி உள்ள ‘அயலா அயலா’ என்கிற இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார். ஹ்ரிதய கட்டானி மற்றும் நரேஷ் ஐயர் இணைந்து பாடியுள்ளார்கள். விண்ணில் இருந்து தரைக்கு வந்த ஏலியனை வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது இந்தப் பாடல். மேலும் ஏலியனுடன் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஜாலியான குத்தாட்டம் போடும் காட்சிகள் உறசாகமளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

எஸ் கே 21

அயலான் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய 21ஆவது படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி. வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola