நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருக்கும் திரைப்படம் அயலான் (Ayalaan). இப்படத்தின் டீசர் வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் புரோமோஷன் வேலைகளை படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. அவ்வகையில் இந்தப் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி சிவக்கார்த்திகேயன்  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான அயலான் திருச்சியில் உள்ள புகழ் பெற்ற மலைக்கோட்டை கோவிலில் தரையிறங்குவதைப் போல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.






திருச்சி என்பது படத்தின் கதாநாயகன் சிவக்கார்த்திகேயன் பிறந்த ஊர் என்பதால் படத்தின் புரோமோசனை திருச்சியில் இருந்து தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தினை கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். 


2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘இன்று நேற்று நாளை’. இந்த படத்தை இயக்கி இயக்குநராக ரவிக்குமார் அறிமுகமாகியிருந்தார். அவரின் அடுத்தப்படமாக 2016 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிக்கும் “அயலான்” படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாகவும் முக்கிய கேரக்டர்களில் சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் நடிக்கிறார்கள்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. 


ஏலியன் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள அயலான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. மேலும் பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 


இந்த படம் குறித்து இயக்குநர் ஆர். ரவிக்குமார் கூறுகையில், ‘இன்று நேற்று நாளை படம் வெளியான 2வது நாள் சிவகார்த்திகேயன் படம் பார்த்துட்டு போன் பண்ணினார். அப்போது அவரிடம் ஏலியன் வச்சு படம் பண்ணும் ஐடியாவை சொல்லலாம் என நினைத்தேன். தொடர்ந்து கருணாகரன் மகளுடைய பிறந்தநாள் விழாவுக்கு வந்தவரிடம் இந்த ஐடியாவை தெரிவித்தேன். சிவகார்த்திகேயனோ, ரொம்ப நல்லாருக்கு. கதையை டெவலப் பண்ணுங்க என சொன்னார். அப்படித்தான் ‘அயலான்’ உருவானது. இந்த படத்தின் பட்ஜெட், இன்று நேற்று நாளை படத்தின் பட்ஜெட்டை விட 25 மடங்கு அதிகம் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.