சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ப்ரின்ஸ். இந்த படம் விமர்சகர்களால் வருத்தெடுக்கப்பட்டதுடன் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. அந்த படத்தின் பிறகு ஸ்கிரிப்ட் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் எடுப்பதாக தகவல்கள் வெளியாகியது.
சமீபகாலமாக, சிறந்த ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுத்து, தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களுடன் பணியாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றனர். இந்நிலையில், சிவகார்த்திகேயன் ஹிந்தியில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் கால் பதிக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் பாலிவுட்டில் அறிமுகமாகப் போகிறார் என்ற செய்தி உறுதியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை அவரது குழுவினரிடமிருந்தோ அல்லது அவரிடமிருந்தோ வரவில்லை. இந்த செய்தியை அதிகாரபூர்வமாக வெளியிட்டவர் அதிவி சேஷ். சிவகார்த்திகேயனின் விரைவில் வெளிவரவிருக்கும் மாவீரன் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிவி சேஷ் பேசுகையில் இதைத் தெரிவித்தார். இந்த செய்தியைக் கேட்ட ரசிகர்கள் அரங்கம் அதிர அலறி ஆரவாரம் செய்தனர். இதற்கு சிவகார்த்திகேயன் மறுப்பும் தெரிவிக்கவில்லை.
ட்ரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்ததால், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில், சிவகார்த்திகேயன் விரைவில் ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகிறார் என்று தெரிவித்தவர் அதிவி சேஷ். மேலும் அவர் சிவகார்த்திகேயனிடம் செய்தி வெளியிட்டதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
ரசிகர்கள் உற்சாகம்:
நடிகரும் இயக்குனருமான அதிவி சேஷ் மேற்கொண்டு பேசுகையில் தான் சிவகார்த்திகேயனின் நண்பர் மட்டுமல்ல, ரசிகரும் கூட என்பதை வெளிப்படுத்தினார். சிவகார்த்திகேயன் ஒரு பெரிய நட்சத்திரம் மட்டுமல்ல, பெரிய இதயமும் கொண்டவர் என்று அதிவி சேஷ் கூறினார்.
சிவகார்த்திகேயன் இந்தி திரையுலகில் காலடி எடுத்து வைக்கவுள்ள இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தவுள்ளது.
மண்டேலா படம் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின். இந்த படத்திற்கு தேசிய விருதினையும் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவரது இரண்டாவது படமான மாவீரன் படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் மிரட்டவுள்ளார் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதற்கு பலர் தளபதி படத்தில் வரும் ரஜினியின் லுக் போல் உள்ளது என கூறினர். பார்ப்பதற்கும் அப்படித்தான் காணப்பட்டார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே மிஷ்கின் சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரி எல்லாம் கிடையாது, ரஜினியே தான் என கூறினார். இதையடுத்து படத்தின் பாடல்கள் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் படங்கள் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததால், தமிழ் சினிமாவின் டாப் ஹூரோக்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் உருவாகியுள்ளார். தெலுங்கிலும் தனது வியாபாரத்தை பெருக்க முயற்சித்த சிவகார்த்திகேயன் அந்த முயற்சியில் படுதோல்வி அடைந்தார். பிரின்ஸ் படம் 5 நாட்கள் கூட பெரும்பாலான தியேட்டர்களில் தாக்குப்பிடிக்கவில்லை. இப்படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனுக்கு சினிமா வாழ்க்கையில் சரியான அடியாக அமைந்து விட்டது. இந்நிலையில் வரும் 14ஆம் தேதி மாவீரன் திரைப்படம் வெளிவர இருக்கிறது.