நடிப்புக்கு பெயர் போன, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசான, அவரின் மூத்த மகன் ராம் குமார் ஒரு தயாரிப்பாளராக இருக்கும் நிலையில், அவ்வப்போது சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். சிவாஜியின் இரண்டாவது மகனான பிரபு, 80பது மற்றும் 90-களில் முன்னணி நடிகராக இருந்த நிலையில் சமீப காலமாக குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.


சிவாஜி குடும்பம்:


சிவாஜி கணேசனின் மகன்களை தொடர்ந்து, சினிமாவிற்கு நடிக்க வந்தவர்கள் தான் ராம்குமார் மற்றும் பிரபுவின் வாரிசுகள். ராம் குமாரின் மகன் சிவகுமார் ஒரு பக்கம் தனித்து விடப்பட்டாலும், அவர் தன்னுடைய சித்தியின் துணையுடன் சினிமாவில் எதிர்நீச்சல் போட்டு தோல்வியை தழுவினார். மீண்டும் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என பிக்பாஸ் வரை வந்தது தனி கதை.


ராம் குமார் பிள்ளைகள்:


ராம் குமாரின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர்கள் 3 ஆண் குழந்தைகள். மூத்த மகனான துஷ்யந்த் சக்ஸஸ் என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்த நிலையில், அந்த படங்கள் தோல்வியை தழுவியது. காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக அறிமுகமான 'மண் பானையும் மீன் குழன்பும்' படத்தை தயாரித்து தோல்வியை சந்தித்தார். சினிமா செட் ஆகாததால் பிஸினஸை கவனித்து வருகிறார்.


தர்ஷனுக்கு நடந்த நிச்சயதார்த்தம்:


இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில், ராம் குமாருக்கு திருமண வயதில் இன்னும் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் இருவருமே இரட்டை குழந்தைகள். ராம் குமாரின் இரண்டாவது மகன் தர்ஷன், தற்போது சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருக்கிறார். பல விளம்பர படங்களிலும் நடித்து பரிச்சியானவர். இவரை தவிர ரிஷ்யன் என்கிற மகன் வெளிநாட்டில் படித்து விட்டு, வேலை செய்து வருகிறார்.


தர்ஷன் டெல்லியில் இருக்கும் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா பயிற்சி பள்ளியில் நடிப்பு பயிற்சி எடுத்து விட்டு மேடை நாடகங்கள், தெருக்கூத்து போன்றவற்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், தர்ஷனுக்கு தான் காதும் காதும் வைத்தது போல் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர் டெல்லியில் படித்த போது ஒரு பெண்ணை காதலித்த நிலையில், அவருடன் தான் நிச்சயம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிச்சயதார்த்தத்தில், ராம் குமாரின் சகோதரர் பிரபுவின் குடும்பம் உள்ளிட்ட சில முக்கிய நபர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.