விஜய் டிவியில் அடையாளமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் சிவாங்கி. அவரின் அம்மா பின்னி கிருஷ்ணகுமார் மற்றும் அப்பா கிருஷ்ணகுமார் இருவரும் மிகவும் பிரபலமான பாடகர்கள்.
இருப்பினும் சிவாங்கிக்கு மிக நல்ல பிரபலத்தை பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக என்ட்ரி கொடுக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து பிரபலத்தின் உச்சிக்கு சென்று மிகப்பெரிய செலிபிரிட்டியாக வலம் வந்தார்.
ஒரு பக்கம் பின்னணி பாடகியாக கலக்கி வந்த சிவாங்கி, டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், காசேதான் கடவுளடா என பல படங்களில் நடித்து வந்தார். மேலும் உலக அளவில் பல இசை கான்சர்ட்டிலும் பங்கேற்று சர்வதேச அளவில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.
தொடர்ந்து குக்கு வித் கோமாளி சீசன் 4இல் குக்காக என்ட்ரி கொடுத்து அசத்தினார். 3ஆவது ரன்னர் அப்பாக வந்து தன்னுடைய திறமையை நிரூபித்தார். இப்படி ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமாகி தற்போது முக்கியமான செலிபிரிட்டிகளில் ஒருவராக அசத்தி வருகிறார் சிவாங்கி.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி அவ்வப்போது போட்டோஸ் போஸ்ட் செய்து ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளுவார். அப்படி அவர் எந்த போஸ்ட் போட்டாலும் அது ரசிகர்களின் கவனத்தை உடனே ஈர்த்து அது ட்ரெண்டிங்காகிவிடும். அப்படி அவர் இன்ஸ்டாகிராம் மூலம் போட்ட போஸ்ட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
சிவாங்கி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "சோசியல் மீடியாவை திறந்தாலே யாருக்காவது திருமணம், நிச்சயதார்த்தம், கர்ப்பம் என இப்படி ஏதாவது ஒன்று தான் என் கண்ணில் படுகிறது. நான் தற்போது அந்தக் கட்டத்தில் இருக்கிறேனா?" எனப் பதிவிட்டுள்ளார்.
சிவாங்கியின் இந்த போஸ்டை பார்த்த பலரும் விரைவில் இது போன்ற நல்ல ஒரு செய்தியை சிவாங்கி சொல்லப் போகிறாரா என தங்களுக்கு தோன்றும் கமெண்ட்களையும் கேள்விகளையும் குவித்து வருகிறார்கள்.