SivaKarthikeyan: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை - மேடையில் போட்டுடைத்த இயக்குநர் அனுதீப்!
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்தான தகவலை அப்படத்தின் இயக்குநர் அனுதீப் சொல்லியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்தான தகவலை அப்படத்தின் இயக்குநர் அனுதீப் சொல்லியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான ஃபேவரைட் நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டாக்டர் படத்தை தொடர்ந்து இந்த படமும் வசூலில் ரூ.100 கோடியை எட்டியதால் ரசிகர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் உருவாகி வருகிறது. சயின்ஸ் பிக்ஷன் படமாக இது உருவாவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Just In




இதனிடையே தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் பிரின்ஸ் படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்தப்படத்தின் இயக்குநர் அனுதீப் பிரின்ஸ் பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளார். தீபாவளி அக்டோபர் 24 ஆம் தேதி என்பதால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே படம் வெளியாக இருப்பது சிவகார்த்திகேயனின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக படத்தில் இருந்து பிம்பிலிக்கி பிலாக்கி வெளியிடப்பட்டது. இந்தப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்தார். இசையமைப்பாளர் அனிருத், ரம்யா பெஹாரா, சாஹிதி சாகந்தி ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.