‘சீதாராமம்’ திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமான மிர்ணாள் தாகூரின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 




‘சீதாராமம்’ படத்தில் நடித்ததின் மூலம் கவனம் ஈர்த்துள்ள நடிகை மிர்ணாள் தாகூர் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1992 ஆம் ஆண்டு பிறந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்து மாஸ் மீடியா பிரிவில் பட்டப்பிடிப்பை முடித்தார்.




 


கல்லூரி படித்துக்கொண்டிருந்த டெலிவிஷன் சீரியல்களில் கவனம் செலுத்தி வந்த அவர்  2012 -ல் வெளியான முஜ்சே குச் கெஹ்தியே காமோஷியான் என்ற தொடரில் நடிகையாக அறிமுகமானார். 




இந்தியில் ஒளிப்பரப்பான ‘கும்கும் பாக்யா’ சீரியல்  பெரிய பிரேக்காக அமைந்தது. இந்த சீரியல் தமிழில்  ‘இனிய இருமலர்கள்’  டப் செய்து வெளியிடப்பட்டது. தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த மிர்ணாள் மராத்தி மொழியில் வெளியான  ‘ விட்டி தண்டு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 




 


தொடர்ந்து  ‘லவ் சோனியா’ ‘ சூப்பர் 30’  ‘பட்லா ஹவுஸ்’ ‘  ‘தூஃபான்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அண்மையில் துல்கர் சல்மானுடன் இவர் இணைந்து நடித்திருந்த சீதாராமம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


 






இயக்குநர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா உள்ளிட்ட பலரது நடிப்பில உருவாகியிருக்கும் திரைப்படம்  ‛சீதாராமம்’. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக நேற்றைய தினம் (ஆகஸ்ட் 5)  திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான அன்றைய தினம் சென்னையில் சீதாராமம் திரைப்படம் 7 லட்சம் ரூபாய் வசூலித்ததாக சொல்லப்பட்ட நிலையில், உலக அளவில் 3 நாட்களில் 25 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் இந்தத்திரைப்படம் தற்போது 50 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண