Siren Trailer: ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள சைரன் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. 

 

அறிமுக இயக்குநரான அந்தோனி பாக்கியராஜ் இயக்கத்தில் உருவான சைரன் படம் வரும் 16ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் முதல் பாடலான நேற்று வரை வெளியாகி வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இன்று சைரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

 

”நிறைய கேஸ்ல டாக்டர் சொல்வது 5 நிமிஷம் முன்னாடி வந்து இருந்தால் காப்பாத்தி இருக்கலாம். அந்த 5 நிமிஷம் நம்ம கையில் தான் உள்ளது” என்ற வசனத்துடன் படத்தின் டீசர் தொடங்குகிறது. டீசருக்கு இடையில் ஜெயம் ரவியின் திருமணம், குழந்தை பிறப்பது போன்ற காட்சிகளும், ஜெயம் ரவியை கொலைகாரன் என அவரது மகளே வெறுத்து ஒதுக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. 

 

கொலைகாரனை கண்டுபிடிக்கும் வழக்கில் போலீஸ் கேரக்டரில் நடித்து இருக்கும் கீர்த்து சுரேஷ், தனது தந்தையான ஜெயம் ரவியை வெறுத்து ஒதுக்குகிறார். மகளே தன்னை கொலை காரன் என விசாரிக்கும் காட்சியில் நடித்து இருக்கும் ஜெயம் ரவி, தனது நேர்த்தியான நடிப்பை காட்டியுள்ளார். 


 

இதன் மூலம் அப்பாவாக ஜெயம் ரவியும்ம், அவரை எதிர்த்து நிற்கும் மகளாகவும், போலீசாகவும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இருவரின் போட்டியில் நடக்கும் சைரன் ஒலி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.