10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களை, ABP Nadu ஊடகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில்,12ஆம் வகுப்பு பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்களை தினந்தோறும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
12ஆம் வகுப்பு தமிழ் பாடத்துக்கான மாதிரி வினாத்தாள் இதோ!
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்
கால அளவு : 3 மணி நேரம் மதிப்பெண்கள்: 90
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.
1.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராம்மி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பாறை உள்ள இடம் எது?
அ) கீழடி- சிவகங்கை ஆ) கழுகுமலை - தூத்துக்குடி
இ) மாங்குளம் - மதுரை ஈ) அரிக்கமேடு- ஆதிச்சநல்லூர்
2.பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே -கூறும் நூல் எது?
அ) தண்டியலங்காரம் ஆ)நன்னூல்
இ)தொல்காப்பியம் ஈ) அகத்தியம்
- உலகப் புவி நாளாக கொண்டப்படும் தினம்
அ)மார்ச் 21 ஆ) ஏப்ரல் 22
இ)மார்ச் 22 ஈ) ஏப்ரல் 21
4.நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது?
அ) 168 ஆ)188
இ )158 ஈ)178
5.தமிழில் திணைப் பாகுபாடு _________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ)பொருட்குறிப்பு ஆ) சொற்குறிப்பு
இ) தொடர்குறிப்பு ஈ) எழுத்துக்குறிப்பு
6.இல் ,மனை எனத் தொல்காப்பியம் குறிப்பிடுவது
அ)குடும்பம் ஆ) வாழிடங்கள்
இ)மலை ஈ) கோட்டை
7.கம்பர், கம்பராமாயணத்திற்கு இட்ட பெயர்
அ)இராம காதை ஆ) இராமாவதாரம்
இ) இராம சரிதை ஈ) கம்பராமாயணம்
- வையகமும் வானகமும் ஆற்றலரிது -எதற்கு ?
அ)செய்யாமல் செய்த உதவி
ஆ) தினைத்துனை செய்த நன்றி
இ) காலத்தினால் செய்த நன்றி
ஈ) பயன்தூக்கார் செய்த உதவி
9.மகா மகோ பாத்தியாய என்ற பட்டத்தை பெற்றவர்
அ) திரு.வி.க ஆ) உ.வே.சா
இ) ம.பொ.சி ஈ) வ.உ.சி
10.காவியம் என்ற இதழை நடத்தியவர்
அ)பாரதியார் ஆ) பாரதிதாசன்
இ) சிசு.செல்லப்பா ஈ) சுரதா
- "எத்திசைச் செல்லினும் ,அத்திசைச் சோறே " -என்ற புறநானூற்றுப் பாடலை பாடியவர்
அ) அதியமான் ஆ) ஔவையார்
இ) பிசிராந்தையார் ஈ) நத்தத்தனார்
12.மா முன் நிரை ,விளம் முன் நேர் என்னும் வாய்பாட்டினை கொண்ட தளை
அ) வெண்சீர் வெண்டள ஆ)நேரொன்றாசிரியத்தளை
இ) இயற்சீர் வெண்டளை ஈ) நிரையொன்றாசிரியத்தளை
13.இந்தியாவின் முதல் பொது நூலகம்
அ) தமிழாய்வு நூலகம் ஆ)கன்னிமாரா நூலகம்
இ) உ.வே.சா. ஈ) செம்மொழித்தமிழாய்வு நூலகம்
- கைப்பூண் பகட்டின் வருந்தி வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே -இவ்வரிசையில் பகடு என்னும் சொல் குறிக்கும் பொருள்
அ) எருது ஆ) நாய்
இ) யானை ஈ) குதிரை
பகுதி -III
பிரிவு -1
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை எழுதுக.
15.அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்கள் யாவை?
16.கவிஞர் சி்பி எவற்றை வியந்து பாட,தமிழின் துனை வேண்டும் என்கிறார் ?
17.உயர்திணைப் பன்மை பெயர்கள், பன்மை விகுதி பெற்றுவருமாறு இரண்டு தொடர்களை எழுதுக.
18.சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை ?
பிரிவு-2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையெழுதுக.
19.ஞாலத்தின் பெரியது எது?
20.வெண்காவிற்குரிய தளைகள் யாவை?
21.எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும் -யார்க்கு?
பிரிவு-3
எவையேனும் ஏழனுக்கு விடை தருக.
22.முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் -இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்கவும்.
23.ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம்.
அ) விளங்கி ஆ) அமர்ந்தனன்
24.வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக .
நம் வாழ்க்கையின் தரம் தமது கவனத்தின் தரத்தை பொறுத்திறுக்கிறது.புத்தகம் படிக்கும்போது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படை தேவையாகும்.
25.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்தெழுக.
கலை- களை- கழை
26.ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
அ) செந்தமிழே ஆ) முன்னுடை
27.தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிடப்படுகின்றன.
28.இலக்கணக் குறிப்பு தருக.
அ)உழாஉது ஆ) கடல்தானை
29.உவமைத் தொடர்களைச் சொற்றொடரில் அமைத்திடுக.
அ) அச்சாணி இல்லாத தேர்போல
ஆ)நகமும் சதையும் போல
30.கலைச்சொல்லாக்கம் தருக.
அ) mobile banking ஆ) debit card
பகுதி- III
பிரிவு-1
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.
31.சங்கபாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும்-விளக்குக.
32."வருபவர் எவராயினும் நன்றி செலுத்து" -இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக .
33".நெல்லின் நேரே வெண்கல் உப்பு "-இத்தொடரின் வழி பண்டமாற்று வணிகத்தை விளக்குக.
34.சூதும் கள்ளும் கேடும் தரும்-திருக்குறள் வழி விளக்குக.
பிரிவு-2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.
35.மூன்றான காலம் போல் ஒன்று எவை ?ஏன்?விளக்குக.
36.யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடும் -உவமையையும், பொருளையும் பொருத்தி விளக்குக.
37.நேர மேலாண்மை குறித்து விளக்கி எழுதுக.
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.
39 .அ) பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக.
அல்லது
ஆ)உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்பொடு உடன்உறைந் தற்று.-இக்குட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
40.இலக்கிய நயம் பாராட்டுக.
(மையக்கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை விளக்குக)
பெற்றெடுத்த தமிழ்தாயைப் பின்னால் தள்ளிப்
பிறமொழிக்குக் சிறப்பளித்த பிழையை நீக்க
ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்
உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?
கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று
கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அக்க்கண்ணைத் திறந்து விட்ட
தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம் .
-நாமக்கல் கவிஞர் .
41.நெய்தல் திணையைச் சான்றுடன் விளக்குக
42.பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
அ) எறும்பு ஊரக் கல்லும் தேயும்
அல்லது
ஆ) கற்றோர்க்கு சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
43.கவிதை புனைக( ஏதேனும் ஒன்றனுக்கு )
மரங்கள் அல்லது மனிதநேயம்
பகுதி- IV
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
44.அ)சினத்தைக் காத்தல் வாழ்வை மேம்படுத்தும் - இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக.
அல்லது
ஆ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
45.அ) பண்டையக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல் , கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.
அல்லது
ஆ) சங்க கால வரலாற்றை அறிந்துகொள்ள , புகளூர்க் கல்வெட்டுகள் எவ்வகையில் துணை புரிகின்றன?- விளக்குக.
46.அ) கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன-இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்கவும்.
அல்லது
ஆ) சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு - இக்கூற்று நனவாக நாம் என்ன செய்ய வேண்டியன யாவை?
பகுதி - V
47.அடிபிறழாமல் செய்யுள் வடிவில் தருக.
அ) "அறிவும் புகழும் -"எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல்
ஆ)" உடைத்து "என முடியும் குறள்.
அடுத்தடுத்த அத்தியாயங்களில், வெவ்வேறு பாடங்களுக்கான மாதிரி வினாத் தாள்கள் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளது.