'சிறகடிக்க ஆசை' (Siragadikka Aasai) சீரியல் இன்றைய (மே 20) எபிசோடில் மீனா முத்து திருமண நாள் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஸ்ருதியும் ரவியும் சேர்ந்து மீனா முத்துவுக்கு பரிசு ஒன்று கொடுக்கிறார்கள். இரண்டாவது முறையாக மீனா முத்து கோயிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பரிசாக கொடுத்ததை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.
அண்ணாமலை பேசுகையில் "பிடிக்காத இரண்டு பேருக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்துது. ஆனா நான் செய்த நல்ல விஷயமா இவங்க கல்யாணத்தை பார்க்குறேன். பொருத்தமான ஜோடி. கணவன் மனைவி இவர்களை போல தான் வாழ வேண்டும்" என்கிறார். முத்துவும் மீனாவும் இன்று போல் என்றும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என பாட்டி வாழ்த்துகிறார். அடுத்ததாக மீனா பற்றி முத்து பேசுகையில் "முதலில் எங்க இரண்டு பேருக்கும் செட் ஆகவே இல்லை. என்னை முரடன் குடிகாரன் இப்படி தான் சொல்லுவாங்க. ஆனா மீனா தான் என்னை வித்தியாசமா பார்த்தா. அவளுக்காக என்னை மாறவைச்சா. அவளுடன் வாழ்வது புது அனுபவமாக இருக்கிறது. நல்ல விஷயம் சொன்ன கேட்டுக்குவேன்" என்கிறான். மீனா முத்து பற்றி பேசுகையில் "கோபத்தில் பேசுவாரே தவிர மனசில் எதுவுமே வைச்சுக்கமாட்டார். பாசம் வைச்சவங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். நான் நினைச்சதை விட ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு அவர் தான் ஒரு அடையாளம் கொடுத்தார்.
இந்த கோபம் சில பழக்கம் எல்லாம் பாதியில வந்தது. அதுக்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கு. அதனால தான் அவர் வாழ்க்கை மாறி இருக்கு. அது என்னனு இதுவரைக்கும் அவர் என்கிட்ட சொல்லல. அதை என்னைக்கு எனக்கு சொல்றாரோ அன்னிக்கு தான் அவர் என்னை முழுசா பொண்டாட்டியா ஏத்துக்கிட்டார் என அர்த்தம்" என மீனா சொல்ல முத்து, மனோஜ் மற்றும் விஜயா முகமே மாறி விடுகிறது. மீனாவோட அம்மா மீனா முத்து பற்றி பேச வர அந்த நேரத்தில் சத்யா வருகிறான். அவனை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இதுதான் இன்றைய எபிசோடுக்கான கதைக்களம்.