Siragadikka Aasai July 18 :விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் நகையை கவரிங்க நகையாக மாற்றியது மனோஜ் தான் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள சொல்லி கேட்கிறான் முத்து. அப்போதும் மனோஜ் நான் எடுக்கவில்லை என சொல்ல விஜயாவும் ரோகிணியும் மனோஜுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்கள்.



"முத்து : நாலு லட்சம் உனக்கு எப்படி வந்துது சொல்லுடா?


மனோஜ் : பார்க் ப்ரெண்ட் கிட்ட தான் வாங்கினேன்.


முத்து : நான் இவனோட ப்ரெண்ட் கிட்ட கேட்டுட்டேன் பா. ஒரு பைசா கூட அவன் இவனுக்கு கொடுக்கலையாம். வேணும்னா போன் பண்ணு கேக்கலாம் " என்கிறான்.


 



முத்து திரும்பவும் மனோஜை அதட்டி கேட்ட மனோஜ் உண்மையை ஒத்துக் கொள்கிறேன். அம்மா தான் மீனா நகையை எடுத்து கொடுத்தாங்க. அடமானம் வைச்சுட்டு மீட்டு கொடுத்துடலாம் என நினச்சேன் ஆனா பணம் பத்தல அதனால் தான் வித்துட்டேன் என மனோஜ் சொல்ல டென்ஷனான அண்ணாமலை மனோஜை அடி அடியென அடிக்கிறார். "நீ திருந்தவே மாட்டியா. எப்போ தான் இந்த திருட்டு புத்தி உன்னை விட்டு போகும்" என திட்டி அடிக்கிறார். 


 



"ரோகினி : என்ன ஆளாளுக்கு மனோஜை இப்படி அடிக்குறீங்க ?


முத்து : அவன் செய்த காரியம் அப்படி. இந்த உண்மை உனக்கு முன்னாலேயே தெரியுமா ?


ரோகினி : ஒரு நாள் முன்னாடி தான் எனக்கு தெரியும். அப்போவே தெரிஞ்சு இருந்தா நான் இப்படி பண்ண விட்டு இருக்கமாட்டேன்" என்கிறாள்.


 


விஜயா மீதும் கடுங்கோபத்தில் இருந்த அண்ணாமலை "பொய் சொன்னது மட்டுமில்லாம மீனாவோட அம்மா மேலயும் எங்க அம்மா மேலயும் பழி போடுறியா? இனி மேல் உன் கையால ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்க மாட்டேன். பேசவும் மாட்டேன்" என சொல்லிவிடுகிறார். 
அதனால் கோபித்து கொண்ட விஜயா ரூமுக்கு போய் கதவை தாழ்பாள் போட்டு கொள்கிறாள். ரோகினி, மனோஜ், ரவி என மூவரும் மாறி மாறி கதவை தட்ட விஜயா வெளியில் வரவே இல்லை. 


 



முத்துவும் மீனாவும் அண்ணாமலையிடம் எவ்வளவோ கெஞ்சி பார்க்கிறார்கள். ஆனால் அண்ணாமலை மனம் மாறுவதாக இல்லை. 
"அண்ணாமலை : இவ்வளவு நாள் பொறுத்து போனதால் தான் அவள் தலை மேலே ஏறி ஆடுறா.  அவள் இனியும் திருந்துவாள் என எனக்கு நம்பிக்கையே இல்லை. உங்க இரண்டு போரையும் ஏமாத்தி அவமானப்படுத்தி இருக்கா. அவளுக்கு போய் நீங்க இரெண்டு பெரும் சப்போர்ட் பண்ணறீங்க. அந்த அளவுக்கு பெரிய மனசு எனக்கில்லை" என்கிறார். 


 


விஜயா தப்பான முடிவு ஏதாவது எடுத்து விடுவாளோ என மீனா பயப்படுகிறாள். 



"முத்து : எல்லாருக்கும் முன்னாடி அசிங்கமானதால அவங்க ரூமுக்கு போயிட்டாங்க. காலையில தூங்கி எழுந்து தானா வெளியில் வந்துடுவாங்க" என்கிறான் முத்து. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.