சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவுக்கு பாட்டியாக நடித்து வருபவர் ரேவதி பாட்டி. இவர் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் மெளன ராகம், தமிழும் சரஸ்வதியும் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருந்தார். கிரிக்கெட் வீரர் தோனியுடன் இவர் நடித்திருந்த விளம்பர படம் வைரலான நிலையில் இவர் தனியார் நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.


அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,  தமிழும் சரஸ்வதியும் சீரியல் தனக்கு ஒரு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்ததாகவும், சிறகடிக்க ஆசை சீரியல் நல்ல ஒரு பிரபலத்தை பெற்று தந்ததாகவும் கூறியுள்ளார். சிறகடிக்க ஆசை சீரியலில் தனக்கு பேரனாக முத்து தன்னை தூக்கி சுத்தும் காட்சியில் சற்றும் வேகமாக சுத்தி விட்டதால், தனக்கு கண் செருகுவது போல் ஆகி விட்டதாக கூறியுள்ளார். பாக்கியலட்சுமி, சக்திவேல் உள்ளிட்ட ஒவ்வொரு சீரியலிலும் தனக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம் என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு கேரக்டரையும் புரிந்து ஜாலியாக நடித்து வருவதாக கூறியுள்ளார். 


தோனியுடன் நடித்த விளம்பரம் குறித்த கேள்விக்கு ரேவதி பாட்டி கூறியதாவது, “நிறைய ஆடிஷன் பண்ணி நல்ல நல்ல கம்பெனியெல்லாம் மிஸ் ஆகி இருக்கு. அதனால ஆடிஷன் முடியுர வரைக்கும் நான் செலக்ட் ஆவேன்ற நம்பிக்கையே இல்லை. பலர் ஆடிஷன் கொடுப்பாங்க, அதுல நம்ம செலக்ட் ஆகுறது கஷ்டம் தான் இருந்தாலும் வாய்ப்பு வரும் போதெல்லாம் தவறாம ஆடிஷன் கொடுப்பேன். அப்படித்தான் இந்த விளம்பரத்துக்கும் ஆடிஷன் கொடுத்தேன்.


நைட் பத்து மண்ணிக்கு கால் பண்ணி நான் செலக்ட் ஆகி இருக்குறதா சொன்னாங்க. வீட்ல எல்லோரும் நான் தான் உன் கூட அசிஸ்டெண்ட்டா வருவேனு சொன்னங்க. அப்போ தான் இது எவ்ளோ பெரிய விளம்பரம்னே எனக்கு தெரிஞ்சது. தோனியோட பர்ஸ்னலா பேச முடியல. ஹலோ மட்டும் தான் சொல்ல முடிஞ்சது. விளம்பரத்தை பார்த்துட்டு எதிர் வீட்ல இருக்கவங்க, பக்கத்து வீட்ல இருக்குறவங்க எல்லாம் நீங்க ரொம்ப லக்கிமானு சொல்றாங்க” இவ்வாறு ரேவதி பாட்டி தெரிவித்தார். தனக்கு மகன், மகள் இல்லாத நிலையில் தன் சகோதரர் ஃபேமிலி இருப்பதாகவும் அவர்கள் தன்னை விரும்பி பார்த்துக் கொள்வதாகவும் ரேவதி பாட்டி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.