Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Siragadikka Aasai Gomathi Priya: சிறகடிக்க ஆசை சீரியல் கதாநாயகி கோமதி ப்ரியா நடிக்க வந்து முதன்முதலில் வாங்கிய சம்பளம் என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Continues below advertisement

சிறகடிக்க ஆசை சீரியல் கதாநாயகியான மீனா கதாபாத்திரத்தில் நடிகை கோமதி ப்ரியா நடித்து வருகிறார். அவர் நேர்காணல் ஒன்றில் தனது சீரியல் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

Continues below advertisement

குடும்பத்தை பாத்துக்கனும்னு ஆசை:

"நான் முதல் குழந்தை என்பதால் வீட்டில் நிறைய ஃபோட்டோக்கள் எடுப்பார்கள். முதல் பெண் என்பதால் அப்பா நிறைய போட்டோ எடுப்பார். போட்டோ ஃபேஸ் என்று பள்ளி, கல்லூரியிலும் கூறுவார்கள். எனக்கு சின்ன வயசுல இருந்து நடிக்கனும்னு எண்ணம் இல்ல. படிக்கனும், நல்ல இடத்துக்கு போகனும்னுதான் குடும்பத்தை நல்லா பாத்துக்கனும்னு ஆசை. 

ஷுட்டிங் கூட பாத்தது இல்ல:

அதுக்கு அப்புறம் ஜாப் போன பிறகு போர் அடிச்சது. என்னடா இது மெஷின் லைஃப் மாறி இருக்குதுனு இருந்தப்ப விஜய் டிவில சான்ஸ் கிடைச்சுது. அப்போதான் ஷுட்டிங்கை முதன்முதலா பாக்குறேன். ஊர்ல எங்கயாவது ஷுட்டிங் நடந்தா கூட பாத்தது இல்ல. முதன்முதலா கேமராவை ஃபேஸ் பண்ணது அங்கதான். எனக்கு இது எல்லாம் புது அனுபவமா இருந்துச்சு. திடீர்னு நம்மள கொண்டு போயி வேற எங்கயாவது விட்டா ஆச்சரியமா, அதிசயமா பாப்போம்ல அப்படித்தான் இருந்துச்சு.

மாடல்-ஆ போனப்ப அங்க இருந்த ஆர்டிஸ்ட் சொன்னாங்க உனக்கு கண்ணு நல்லா இருக்கு, முடி நல்லா இருக்குது, நடிக்கலாம்னு சொன்னாங்க. அதுக்கு அப்புறம்தான் நாமளும் ட்ரை பண்ணலாம்னு ட்ரை பண்ணி பாத்தேன். எதுவும் ஒர்க் அவுட் ஆகல. ஃபைனலா சீரியலுக்கு வந்துடுச்சு. 

முதல் சம்பளம்:

என்ன பாத்தாலே பாவப்பட்ற கேரக்டர்தான் கொடுக்குறாங்க. டூயல் ரோல், மாற்றுத்திறனாளி மாதிரி பண்ணனும். வீட்ல எந்த வேலையும் செய்யமாட்டோம். தண்ணிகூட எடுத்து கொடுக்க மாட்டோம், ஆனா சீரியல்ல அப்படி நடிக்குறத பாத்து எப்படி நடிக்குற நீனு வீட்ல கலாய்ச்சது உண்டு. 

மிஸ்டர் அண்ட் மிஸஸ்-க்கு மாடலா போனதுல பேமண்ட் கொடுப்பாங்கனே தெரியாது. எல்லாரும் உங்களுக்கு எவ்வளவு தந்தாங்கனு கேக்குறப்ப, காசு எல்லாம் தருவாங்களானு? கேட்டுட்டு அங்க வாங்குனது 1000 ரூபாய். அதுதான் நான் முதன்முதலா நடிக்க வந்து வாங்குன சம்பளம்."

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். 

சிறகடிக்க ஆசை சீரியல் தமிழின் நம்பர் 1 சீரியலாக டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து நீடித்து வருகிறது. கதாநாயகியான கோமதி பிரியாவின் மீனா கதாபாத்திரத்திற்கு என்று பல ரசிகர்கள் உள்ளனர். இதன்மூலம் அனைத்து வீடுகளுக்கும் மிகவும் பரிச்சயமானவராக கோமதி ப்ரியா மாறியுள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola