RJ-வா இருந்து சினிமா பாடகியா மாறுனவங்க சுசித்ரா. இவங்களோட பாட்டு எந்த அளவுக்கு பிரபலமோ, அந்த அளவுக்கு இவங்களோட சர்ச்சையான கருத்துக்களும் பிரபலம். இவங்க நேத்து அஜித் பத்தி பேசுன ஒரு விஷயம் வைரலாகி, தல ரசிகர்கள ரொம்பவே கோபப்படுத்தியிருக்கு. அதனால, சமூக வலைதளங்கள்ல சுசித்ராவுக்கு கடும் கண்டனங்கள அவங்க பதிவு பண்ணிட்டு இருக்காங்க.


எப்போதும் சர்ச்சையில் சிக்கும் பாடகி சுசித்ரா


திரைப்பட பாடகியா ஜெயிச்ச சுசித்ரா, யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்கள் மூலமா, அவங்களோட தனிப்பட்ட கருத்துக்களையும் பதிவிட்டுட்டு வர்றாங்க. அந்த வகைல, சினிமா பிரபலங்கள பத்தி அவங்களுக்கு தெரிஞ்ச விஷயங்களையும் பதிவிட்டுட்டு வர்றாங்க. அதனால, அவங்களுக்கு சமூக வலைதளங்கள்ல பார்வையாளர்களும் அதிகமா இருக்காங்க. அங்களோட கருத்துக்கள் சில நேரங்கள் இல்ல, பல நேரங்கள்ல அவங்களுக்கு பிரச்னையதான் கொடுத்துருக்கு. ஆமாங்க, அவங்க யதார்த்தமா அவங்களுக்கு தெரிஞ்ச உண்மைய சொல்ல, அது சர்ச்சையா கிளம்பிடுது. சமீபத்துல, அவங்களோட கணவரான நடிகர் கார்த்திக் குமார் பத்தி அவங்க சொன்ன விஷயம் கூட பூதாகரமா வெடிச்சுச்சு. இப்படி பல தருணங்கள்ல அவங்க சர்ச்சைல சிக்கி இருக்காங்க. 


அஜித் குறித்து விமர்சித்த சுசித்ரா.. கொந்தளித்த ரசிகர்கள்


இப்படி சர்ச்சைகளுக்கு பெயர் போன சுசித்ரா, நேத்து(16.01.25) தன்னோட இன்ஸ்டா பக்கத்துல லைவ்ல பேசி இருக்காங்க. அப்போ, அஜித் குமார் கார் ரேஸ்ல கலந்துக்கிட்டது பத்தி பேசுன அவங்க, வயசான காலத்துல அஜித் குமாருக்கு இதெல்லாம் தேவையான்னு கேள்வி எழுப்பியிருக்காங்க. அதோட நிக்காம, சினிமாவுல நடனமாட முடியல, சண்டைக் காட்சிகள்ல சரியா நடிக்க முடியல, அப்படி இருக்கும்போது, வலிமையான நபர்கள் பங்கேற்குற கார் ரேஸ்ல இவர் ஏன் போய் கலந்துக்கணும்னு கேட்டு, அவருக்கு பேசும்போதே மூச்சு வாங்குதுன்னு விமர்சனம் பண்ணியிருக்காங்க.


ஏன் அதிகப்படியான பணத்தைக் கொண்டுபோய், கார் ரேஸில் கொட்டணும்? அந்த பணத்த தமிழ்நாட்டில ஏழைக் குழந்தைகளின் படிப்புக்காக செலவு செய்யலாமே?-ன்னு சென்ன அவங்க, இப்போ எனக்கு விஷால பார்த்தா பாவமா இல்ல, அஜித்குமார பார்த்தாதான் பாவமா இருக்குன்னு கடுமையாக விமர்சனம் செஞ்சுருக்காங்க சுசித்ரா. இது சேசியல் மீடியால பயங்கர புயல கிளப்பியிருக்கு. சுசித்ராவின் இந்த பேச்ச கேட்டு கடுப்பான அஜித் ரசிகர்கள், சசித்ரா மேல கடுமையான விமர்சனங்களை முன்வைச்சுட்டு வர்றாங்க.