அஜித் குமார்
அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆரவாரத்தைப் பெற்றுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் காத்திருந்து வருகிறார்கள். வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் பல வருடங்களுக்குப் பின் அஜித் மீண்டும் கார் பந்தையத்திற்கு திரும்பியுள்ளது அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. துபாயில் நடைபெற்ற கார் பந்தையத்தில் அஜித் மற்றும் அவரது குழு கலந்துகொண்டது. இந்த பந்தையத்தில் 3 ஆவது இடத்தை பிடித்தது அஜித்தின் குழு. அடுத்தடுத்து எட்டு சிறு ரேஸில் அஜித் குமார் கலந்துகொள்ள இருக்கிறார்.
கேமராவுக்குள் வந்த பெண்
திரைப்படங்கள் தவிர அஜித்தை எந்த பொது மேடைகளிலும் சினிமா நிகழ்ச்சிகளிலும் பார்ப்பது அரிது. தனது ரசிகர்களுக்காக ஒரு பேட்டி கொடுத்துவிட மாட்டாரா என்கிற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த ரசிக பட்டாளமும் காத்திருந்தது. இந்நிலையில் துபாயில் அஜித் பல்வேறு சர்வதேச பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
தனது ரசிகர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், தங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் , என்பதை பல்வேறு பேட்டிகளில் அஜித் பேசி வருகிறார். துபாயில் தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தும் , அவர்களுடன் செல்ஃபீ எடுத்தும் அஜித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் . அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் அஜித் பேசிக் கொண்டிருக்க பெண் ஒருவர் கேமரவில் குறுக்கே நடந்து செல்கிறார். கொஞமும் கோபம் இல்லாமல் நிதானமாக அஜித் அந்த பெண்ணிடம் 'நீங்கள் குறுக்கே வந்துட்டீங்க' என்று சொல்லி சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது