இசைப்பேரரசி என்று போற்றப்படும் அளவிற்கு புகழ்பெற்ற ஒரு பாடகி என்றால் அது ஸ்ரேயா கோஷல்தான். ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர் ஆகியோர் அளவுக்கு தமிழ், மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பெங்காலி, இந்தியிலும் கலக்கி வருபவர் ஸ்ரேயா கோஷல். மேற்கு வங்கத்தில் பிறந்திருந்தாலும், எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியைச் சேர்ந்தவர் என்று கூறும் அளவுக்கு சிறப்பாக பாடும் திறமை உடையவர். இவருடைய அழகான பல பாடல்கள் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. அவற்றில் இரவு நேரங்களில் கேட்கும் வகையில் அமைந்த சில பாடல்களை என்னென்ன?


கண்ண காட்டு போதும்:


விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ரெக்க. இந்தப் படத்தில் இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் குரலில் இப்பாடல் அமைந்து இருக்கும். இந்தப் பாடலின் இசை மற்றும் அவரது குரல் அவ்வளவு சிறப்பாக இருக்கும். 


“தொல்லைகளை கூட்டினாலும் நீ தூரம்


நின்னா தாங்கல கட்டிலிடும் ஆசையால


 என் கண்ணு ரெண்டும் தூங்கல உன்ன 


கண்டதும் மனசுக்குள்ள எத்தனை


கூத்து சொல்லவும்...”


 



2. என் ஆள பாக்கப்போறேன்:


சந்திரன், ஆனந்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கயல். இந்தப் படத்தில் இமான் இசையில் அமைந்த சிறப்பான பாடல் இது. இதற்கும் ஸ்ரேயா கோஷலின் வைர குரல் மற்றும் பாடகர் ரஞ்சித்தின் குரலும் சிறப்பாக இருக்கும். 


“வீட்ட விட்டு வந்துட்டேனு


சொல்ல போறேன் கூட்டிக்கிட்டு


போயிடுனு சொல்ல போறேன்


இததான் எதிா்பாா்த்து நான்


கிடந்தேன் உயிா் வோ்த்து


என சொல்லி ஆசையில்


அல்லாடுவான் மனம் துள்ளி


காதலில் தள்ளாடுவான்


அத நான் பாத்தே அழபோறேன்...”


 



3.பூக்களே சற்று ஓய்வு எடுங்கள்:


விக்ரம், ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐ. இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் பிரம்மாண்டமாக இருக்கும். இயக்குநர் சங்கர் பாடல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருப்பார். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஹரிசரண் மற்றும் ஸ்ரேயா கோஷல் குரலில் இப்பாடல் அமைந்திருக்கும். 


“நீர்வீழ்ச்சி போலே


நின்றவன் நான் நீந்த ஒரு


ஓடை ஆனாய் வான் முட்டும்


மலையை போன்றவன் நான்


ஆட ஒரு மேடை ஆனாய்..”


 



4. நன்னாரே:


ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான திரைப்படம் குரு. இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல் மற்றும் உதய் மசும்தார் குரலில் அமைந்த சிறப்பான பாடல். 


“மழையின் தாய்மடியில்


சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்


காதல் பெருக்கெடுத்து இன்று


நதியாய் இறங்குகின்றேன்


ஒரு காதல் குரல்


பெண்ணை மயக்கியதே


ஒரு காதல் குரல் பெண்ணை


மயக்கியதே காட்டு புறா இந்த


மண்ணை விட்டு விண்ணை


முட்டும்...”


 



5. மன்னிப்பாயா:


சிம்பு,த்ரிஷா நடிப்பில் வெளியான சிறந்த காதல் திரைப்படம் விண்ணை தாண்டி வருவாயா. இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடி இசையமைத்த சிறப்பான பாடல் இது. ரஹ்மானுடன் சேர்ந்து ஸ்ரேயா கோஷல் பாடியிருப்பார். 


“அன்பிற்கும்


உண்டோ உண்டோ அழைக்கும்


தாழ் அன்பிற்க்கும் உண்டோ


அழைக்கும் தாழ் ஆர்வல


புண்கண்ணீர் பூசல் தரும்


அன்பிலார் எல்லாம் தமக்குரியர்


அன்புடையார் என்றும் உரியர்


பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன்


புல்லிறேன் நெஞ்சம் கலத்தல்


உருவது கண்டு...”


 



இவை தவிர மேலும் பல ஹிட் பாடல்களை ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.