தமிழ் சினிமாவில் முக்கிய மற்றும் முன்னணி பாடகியாக இருப்பவர் பாடகி சைந்தவி. இவர் இசையமப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சைந்தவியும் , ஜி.வி-யும் காதலித்து 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் மகள் குறித்து சைந்தவி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
மகளைப்பற்றி சைந்தவி :
“ஆரம்பத்தில் எல்லாம் அவளுக்கு சோகமான பாடல்கள் கேட்டாலே அழுகை வந்துடும் . எள்ளு வய பாட்டை கேட்டதும் , பாதியிலேயே அந்த மியூசிக் வரும் பொழுதெல்லாம் அழுதுடுவா..அந்த மாதிரி பாடல்களை எல்லாம் தவிர்த்திடுவோம். கையிலே ஆகாசம் பாடலை அவள் தூங்குறதுக்காக நான் பிளே பண்ணுவேன். கொஞ்ச நாளுக்கு பிறகு அந்த பாட்டை போட்டாலே அழுதுடுவா ... ஏன்னா நான் தூங்க வைக்க போறேங்குறது அவளுக்கு தெரிஞ்சுடுச்சு. கார்டூன் ரைம்ஸ்தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும் . தமிழ், ஆங்கிலம் எதுவாக இருந்தாலும் அவள் கூட சேர்ந்து பாடுவாள்... லிரிக்ஸ் தப்பா பாடினாலும் கூட , சரியான மீட்டர்ல பாடுவா . தினமும் புதுசு புதுசா ஏதாவது பண்ணிட்டே இருப்பாங்க . அன்வி பிறந்த பிறகு இப்போதெல்லாம் வீல்ஸ் ஆன் தி பஸ் கோஸ் , பாபா பிளாக் ஷீப் , டாடி ஃபிங்கர் போன்ற பாடல்களைத்தான் அதிகமாக முணுமுணுக்கிறேன் “ என்றார்.
சைந்தவி சிறு வயதில் இருந்தே கர்நாடக பாடகராக புகழ்பெற்றவர். முறையாக இசை கற்ற சைந்தவிக்கு முதல் முதலாக சினிமாவில் பாடகியாக அறிமுகப்படுத்தியவர் யுவன் சங்கர் ராஜா. அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் பாடியவர் முதன் முறையாக ஜி.வி.பிரகாஷுடன் , மதராசப்பட்டினம் படத்தில் பாடியிருந்தார். ஜி.வி இசையில் சைந்தவி பாடியிருந்தாலும் , அவருடன் இணைந்து பாடிய டூயட் பாடல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.