கனடாவுக்கான மாணவர் விசா தாமதமானதால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர். இரண்டு நாட்களாக காணாமல் போன 23 வயது இளைஞனின் சடலம், ஹரியானாவின் குருக்ஷ்டெரா மாவட்டத்தில் உள்ள கால்வாயில் இருந்து இன்று (20/08/2022) வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.  அவரது விசா வியாழன் அன்று வந்துவிட்டது, ஆனால் அவர் காணாமல் போயிருப்பதால் அவரிடம் சொல்ல முடியவில்லை, அதற்குள் இறந்துவிட்டார் என்று குடும்ப நண்பர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 


ஹரியானாவின் குருக்ஷ்டெரா மாவட்டத்தில் உள்ள கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்ட , ஷாபாத் சப்-டிவிஷனில் உள்ள கோர்கா கிராமத்தைச் சேர்ந்த விகேஷ் சைனி என்ற தீபக் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஜான்சா நகருக்கு அருகே உள்ள கால்வாயில் குதித்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.   அவர் மூன்று . விகேஷ் சைனியின்  தந்தை அரசு வேலையில் உள்ளார் என்பது தெரிய வந்தது. விகேஷ் சைனியோடு பிறந்தவர்கள், ஒரு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் என மொத்தம் மூன்று பேர். இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்த அவர், கனடாவில் முதலில் படித்துவிட்டு அங்கேயே செட்டில் ஆக விரும்புவதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். கோர்கா கிராமத்தின் முன்னாள் சர்பஞ்சும், குடும்ப நண்பருமான குர்னாம் சிங் என்பவர், "வியாழன் அன்று, அவருக்கு விசா வந்தது. ஆனால் அதற்குள் அவரைக் காணவில்லை. கனடாவுக்கு தனது நண்பருக்கு மட்டும் விசா வந்ததில் இருந்தே அவர் வருத்தமாக இருந்து வந்தார்.  குடும்பமும் தங்கள் மகனை நல்ல வாழ்க்கைக்காக கனடாவுக்கு அனுப்ப விரும்பினர். அவர் எப்போது விண்ணப்பித்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. வியாழன் அன்று அவரைக் காணவில்லை என தேடுதலின் போது அவரது செருப்புகள் மற்றும் மோட்டார் பைக்கை நர்வானா கிளை கால்வாய்க்கு அருகில் குடும்பத்தினர் கண்டுள்ளனர்.கால்வாய்க்கு அருகில் வண்டியை நிறுத்திவிட்டு அவர், கால்வாயில் குத்தித்து தற்கொலை செய்திருக்க வேண்டும்.  பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அப்பகுதி காவல் துறை பொறுப்பாளர் ராஜ்பால் சிங் தெரிவித்துள்ளார். போலீசார் அறிக்கை தாக்கல் செய்யத் தேவையான விசாரணையை துவக்கியுள்ளனர். ஆனால் இது தற்கொலையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். கோவிட் பெருந்தொற்று  தளர்ந்த பிறகும் மாணவர் விசா தாமதமாக மாணவர்களை வந்தடைவது ஒரு பிரச்சனையாக உள்ளது. மேலும்,  கனடாவைத் தவிர, UK மற்றும் US ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பங்களை அழைப்பதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. மாணவர் விசா தாமதமாக வருகிறது என்பது,  உலகளாவிய பிரச்சனையாகத் இருக்கிறது என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. விகேஷ் சைனியின் இந்த நிலை அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 




மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.



சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)