கமல்ஹாசன் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இடம்பெற்ற ‘மஞ்சள் வெயில் மாலையிலே’ பாடலை ஹரிஹரனுடன் இணைந்து பாடியவர் கிரிஷ். அதன்பின்னர் இவர் பல திரைப்படங்களில் பின்னணி பாடகராக பாட்டு பாடியுள்ளார். இவருக்கும் நடிகை சங்கீதாவிற்கும் 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

 

இந்நிலையில் பாடகர் கிரிஷ் தன்னுடைய மகள் சிவியாவுடன் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இவர் தன்னுடைய மகளுடன் ஒரு ரீல்ஸ் வீடியோ செய்கிறார். அதில், பாடகர் கிரிஷ், ”வேம்புலி உன்னை அடிச்சு நான் தூக்கிறேன் டா” எனக் கூறுகிறார். அதற்கு அவருடைய மகள், “வேணாம் பா நீ நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் பெரிய ஃபைட்டர் இல்லை. எல்லாம் பில்டப் பா .. உள்ளே ஒன்னும் கிடையாது பா..” எனக் கூறி நடிக்கிறார். 

 

இந்த வீடியோவை பதிவிட்டு இது ஒரு விளையாட்டான வீடியோ என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதில் நடிகர் ஆர்யாவை அவர் டேக் செய்துள்ளார். தந்தை-மகளின் இந்த வீடியோவை தற்போது பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  

 

அந்தவகையில் இயக்குநர் வெங்கட்பிரபு இது தொடர்பாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “உங்களுடைய மகள் மிகவும் கியூட்டாக நடித்துள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார். இது போன்று பலரும் தங்களுடைய கருத்துகளை இந்த வீடியோ தொடர்பாக தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க:நயன்தாரா நடிப்பில் உருவாகும் ஜென்டில்மேன் பார்ட் 2..? ரசிகர்கள் உற்சாகம்..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண