Kenishaa Francis : ஜெயம் ரவி பாதுகாப்பாக இருக்கிறாரா? நெட்டிசனின் கேள்விக்கு பதிலளித்த கெனிஷா பிரான்சிஸ்

Jayam Ravi : நடிகர் ஜெயம் ரவியுடன் ரகசிய உறவில் இருப்பதாக வெளியான வதந்திகளுக்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் பதிலளித்துள்ளார்

Continues below advertisement

ஜெயம் ரவி

கோலிவுட் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் நபராக இருந்து வருகிறார் ஜெயம் ரவி . கடந்த செப்டம்பர் 9 அம் தேதி தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண உறவை முடிவு செய்துள்ளதாக ஜெயம் ரவி தெரிவித்தார். இந்த விவாகரத்து இருவரும் பரஸ்பரம் சேர்ந்து எடுத்த முடிவு என்று தெரிவித்திர்ந்தார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அவர் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்த விவாகரத்து முடிவு முழுக்க முழுக்க ஜெயம் ரவி தனது சொந்த விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்டது எனவும் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Continues below advertisement

கெனிஷா பிரான்சிஸ் விளக்கம்

நடிகர் ஜெயம் ரவிக்கும் கோவாவைச் சேர்ந்த பிரபல பாடகியான கெனிஷா பிரான்சிஸ் என்பருக்கும் தொடர்பு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின.  நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக் கொண்டபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தற்போது நடிகர் ஜெயம் ரவி பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார் 

இந்த தகவல்கள் இணையத்தில் காட்டுத்தீப் போல பரவத்தொடங்கியதும் கெனிஷா பிரான்சிஸில் இன்ஸ்டாகிராம் கணக்கை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டார்கள். அவரது பதிவுகளில் ட்ரோல் செய்யும் வகையில் பல கமெட்ன்கள் பதிவிடப்பட்டன. தற்போது நெட்டிசன் ஒருவரின் கமெண்டிற்கு கெனிஷா பதிலளித்துள்ளார். 

கெனிஷாவின் பதிவு ஒன்றில் “ ஜெயம் ரவி உங்களுடன் பத்திரமாக இருக்கிறாரா ?” என்று நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார் இதற்கு பதிலளித்த கெனிஷா “ நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் பாதுகாப்பாக  இருக்கிறீர்களா. உங்களிடம் இருந்து உங்கள் கீழ்மையான சிந்தனைகளில் இருந்தும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா. முதலில் நீங்களே ஒரு பாதுகாப்பான நபர் தானா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜெயம் ரவி விளக்கம்

”வாழு வாழவிடு. ஒரு பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். அப்படி பண்ணாதீங்க. கெனிஷா 600 லைவ் ஷோக்களில் பாடியவர். தனது வாழ்க்கையில் சொந்தமாக இந்த இடத்திற்கு வந்தவர். நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார்.அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மனநல ஆலோசகர். நானும் அவரும் சேர்ந்து ஹீலிங் மையம் ஒன்றை தொடங்குவது தான் எங்களது நோக்கம். அதை கெடுக்காதீங்க. அதை யாரும் கெடுக்கவும் முடியாது” என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்

 

Continues below advertisement
Sponsored Links by Taboola