Actress Chinmayi: ”எங்கள் பிரபஞ்சத்தின் மையம்..” : குழந்தைகளுக்கு தாயானார் பாடகி சின்மயி.. இரட்டை குழந்தைகளுக்கு இதுதான் பெயர்..

’த்ரிப்தா மற்றும் ஷ்ரவாஸ், எங்களது புதிய மற்றும் என்றைக்குமான பிரபஞ்சத்தின் மையம் இனி இவர்கள் தான்’ - சின்மயி ஃபேஸ்புக் பதிவு

Continues below advertisement

பிரபல பின்னணிப் பாடகி சின்மயி - நடிகர் ராகுல் ரவீந்தர் தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. இதுகுறித்து அவர் தன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

பாடகி சின்மயி சமீப காலமாக தன் பாடல்கள் தாண்டி, தன் சமூக வலைதளக் கருத்துகள் மூலமே அதிகம் அறியப்படுகிறார்.

தனி நபர் தாக்குதலுக்கு ஆளான சின்மயி

பாடலாசிரியர் வைரமுத்து மீதான 'மீ டூ' புகாரைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக திரைப் பிரபலங்கள் தொடங்கி பல்வேறு துறைகளிலும் பெண்களிடம் அத்துமீறும் ஆண்களுக்கு எதிராக சின்மயி தொடர்ந்து குரல் எழுப்பியும் கண்டித்தும் வருகிறார்.

தன் கருத்துக்களுக்காக சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனி நபர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்த சின்மயி தாயாகாதது குறித்தும் பலர் மோசமாக அவரது பதிவுகளில் கமெண்ட்ஸ் செய்தும் வந்தனர்.

’இனி எங்கள் பிரபஞ்சத்தின் மையம் இவர்கள்தான்’

இச்சூழலில் தான் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் சின்மயி தான் கர்ப்பம் தரித்தது குறித்து இதுநாள் வரை பேசாமல், இன்று தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது குறித்துப் பதிவிட்டுள்ளார்.

தன் குழந்தைகளின் கை விரல் பிடித்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் சின்மயி, “ட்ரிப்தா மற்றும் ஷ்ரவாஸ், எங்களது புதிய மற்றும் என்றைக்குமான பிரபஞ்சத்தின் மையம் இனி இவர்கள் தான்.


எனது கர்ப்ப காலம் முழுவதும் நிறைய பேர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் எனக்கு குழந்தை இல்லாதது குறித்தும், நான் பெண்ணாக முழுமையடையவில்லை என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.

நான் பெண்கள் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்னைகளை  நேரடியாக புரிந்து கொண்டு அமைதி காத்தேன்.

இது பற்றி பின்னால் நிறைய பேசுகிறேன். ஆனால் இது நிச்சயம் மக்களைப் பற்றிய கற்றல் அனுபவமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

’மாஸ்கோவின் காவிரி’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ராகுல் ரவீந்தரை கடந்த 2014ஆம் ஆண்டு சின்மயி திருமணம் செய்து கொண்டார்.  தன் தனிப்பட்ட வாழ்வு, திருமண வாழ்வு பற்றிய புகைப்படங்களை சின்மயி தன் சமூக வலைதளப் பக்கங்களில் அதிகம் பகிராதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola