மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர் ரிஷி நடிப்பில் திரெளபதி 2 படம் உருவாகி வருகிறது.ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரெளபதி 2 படத்தின் முதல் பாடல் 'எம்கோனே' இன்று வெளியானது. சின்மயி இந்த பாடலை பாடியிருந்தது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியளித்தது. இந்த பாடலை பாடியதற்காக சின்மயி தற்போது வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திரெளபதி 2 முதல் பாடலால் சர்ச்சை
மோகன் ஜி இயக்கத்தி கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான படம் திரெளபதி. இப்படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் சாதிய பெருமிதம் பேசும் விதமாக அமைந்திருந்தது பரவலாக பேசுபொருளானது. அதே போல் இப்படத்தில் சாதிக்கு எதிராக படமெடுக்கும் இயக்குநர்களையும் மறைமுகமாக மோகன் ஜி தாக்கும் விதமாக காட்சிகள் அமைத்திருந்தார். திரெளபதி முதல் பாகத்தைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் மோகன் ஜி. ரிச்சட் ரிஷி இப்படத்தில் நாயகனாக தொடர்கிறார் . ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இன்று திரெளபதி 2 படத்தின் முதல் பாடலான 'எம்கோனே' பாடல் வெளியானது. சின்மயி இந்த பாடலை பாடியிருந்தது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது. இதனால் சின்மயி மீது அடுத்தடுத்து விமர்சனங்கள் பறந்த.
வருத்தம் தெரிவித்த சின்மயி
இந்த விமர்சனங்களுக்கு பின்னணி பாடகி சின்மயி தற்போது பதிலளித்துள்ளார் . " நான் விளம்பரங்களில் ஜிங்கில்கள் பாடும் நாட்களில் இருந்து 18 வருடங்களாக எனக்குத் தெரிந்த ஒரு இசையமைப்பாளர் ஜிப்ரான். அவரது அலுவலகம் இந்தப் பாடலைப் பாட அழைத்தபோது, நான் வழக்கம்போலச் சென்று பாடினேன். எனக்கு சரியாக நினைவிருந்தால், இந்த அமர்வின் போது ஜிப்ரான் இல்லை - பாடலுக்கு எப்படி ஸ்வரமாக ஒலிப்பது என்பது குறித்து எனக்கு ஒரு யோசனை வழங்கப்பட்டது; நான் பதிவை முடித்துவிட்டு வெளியேறினேன். எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் ஒருபோதும் இந்த பாடலை பாட ஒத்துழைத்திருக்க மாட்டேன், ஏனென்றால் சித்தாந்தங்கள் என்னுடையவற்றுக்கு முற்றிலும் முரணாக உள்ளன. இதுதான் முழுமையான உண்மை." என அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்
மேலும் பல்வேறு பாடல்களை பாடும் போது அது எந்த படத்திற்காக என்பதை கூட இசையமைப்பாளர்கள் தெவிக்கமாட்டார்கள் என்று சின்மயி கூறியுள்ளார்.