835 கோடியில் உருவாகும் ராமாயணம்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரூ 835 கோடி பட்ஜெட்டில் ராமாயணம் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நடிகர் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளார்கள். கே.ஜி.எஃப் பட நடிகர் யாஷ் ராவணனாகவும் , சன்னி தியோல் அனுமனாக நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் ஜாம்பவான் இசை கலைஞர் ஹான்ஸ் ஸிம்மர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெறும் வரவேற்பைப் பெற்றது. 

Continues below advertisement

அதிபுருஷ் vs ராமாயணம்

இதற்கு முன்பாக ராமாயணத்தை மையமாக வைத்து பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாக வசூல் ரீதியாக பெறும் தோல்வியை சந்தித்தது. முக்கியமாக படத்தின் படுமோசமான வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. தற்போது ராமாயணம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஆதிபுருஷ் படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பேசிவருகிறார்கள். ஆதிபுருஷ் படத்தோடு ஒப்பிடும் போது ராமாயணம் படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மிக சிறப்பாக உருவாகியிருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். 

ரன்பீர் கபூர் மீது சைபர் தாக்குதல் 

முன்னதாக ராமாயணம் படத்தில் சாய் பல்லவி நாயகியாக தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர் மீது இந்துத்துவ அமைப்புகள் சைபர் தாக்குதல் நடத்தினர். அவர் படப்பிடிப்பின் போது அசைவ உணவு சாப்பிடுவதாக கூறி அவரை விமர்சித்தனர். தற்போது நடிகர் ரன்பீர் கபூர் மீது சைபர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் இந்துத்துவ கும்பல். மாட்டுக்கறி சாப்பிடுபவர் ராமராக நடிப்பதா என அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். 

Continues below advertisement

ரன்பீர் கபூருக்கு ஆதரவாக பேசிய சின்மயி

ரன்பீர் கபூருக்கு ஆதரவாக பின்னணி பாடகி சின்மயி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். " இந்த நாட்டில்  கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு பாலியன் வன்கொடுமை செய்த ஒரு பாபாஜி ஓட்டுக்காக ஜாமினில் வெளிவர முடியும். ஆனால் ஒருவர் சாப்பிடும் உணவு தான் இவர்களுக்கு பெரிய பிரச்சனையாக தெரிகிறது" என்று சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் ரன்பீர் கபூருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்