அல்கா யாக்னிக்


1980 களில் இந்தி சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அல்கா யாக்னிக். 90 களில் வெளியான படங்களில் அல்கா யாக்னிக் பாடல் பாடாத படங்களே அரிது தான் . அதிலும் குறிப்பாக உதித் நரேன் மற்றும் அல்கா யாக்னி இணைந்து பாடிய பாடல்களுக்கு 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் பெரும் பங்கு இருக்கிறது. அதேபோல் இன்றையத் தலைமுறையைச் சேர்ந்தவர்களும் அல்கா யாக்னிக் பாடல்கலை ரசித்து கேட்கிறார்கள்.


குறிப்பாக ஏ.ஆர் ரஹ்மான் இசையில் அவர் பாடிய ‘தும் சாத் ஹோ’ சமீபத்தில் வைரலான ;து கியா ஜானே’ ஆகிய பாடல்கள் இன்றையத் தலைமுறை ரசிகர்களையும் சென்று சேர்ந்துள்ளன. கிட்ட 1,114 படங்களில் 2,486 பாடல்களை பாடியுள்ளார். இதனிடையே அல்கா யாக்னிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


செவித்திறன் குறைபாடு பாதிப்பு


தனக்கு அரிய வகை செவித்திறன் பாதிப்பு இருப்பதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் “ கடந்த சில நாட்கள் முன்பு விமானத்தில் இருந்து நான் வெளியேறினேன் . அப்போது திடீரென்று  என்னால் எதையும் கேட்க முடியவில்லை. என்னுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடம் இந்த தகவலை நான் பகிர்ந்துகொள்ள முடிவெடுத்திருக்கிறேன். என் மருத்துவர்கள் எனக்கு அரிய வகை நரம்பியல் வழி செவித்திறன் பாதிப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள்.


இது ஒருவகை வைரஸ் தாக்குதலால் ஏற்படக் கூடியது. இப்படியான ஒன்றை எதிர்கொள்ள நான் தயாராகவே இல்லை. ஆனால் இதை பொறுமையாக கையாளவே முயற்சி செய்கிறேன். ரசிகர்களாகிய நீங்கள் அதுவரை எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். என் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் அதிகப் படியான சத்தம் மற்றும் ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். என்னுடைய உடல் நிலை பற்றிய தகவல்களை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வது வரை எனக்கு உங்களுடைய ஆதரவு வழங்கியபடி இருங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார். 






அல்கா யாக்னிக் பாதிக்கப் பட்டிருப்பது மிகவும் அரிய வகையான நோய் என்றும் , இது ஒரு லட்சத்தில் 5 முதல் 20 நபர்கள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.