சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் 500 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியல் கடந்த 2023ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த சீரியல் ஆனந்தி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் வளர்ந்த ஆனந்த வெள்ளந்தியாகவும் இருக்கிறார். தனது குடும்ப கஸ்டத்தை போக்க சென்னைக்கு வந்த ஆனந்தி கார்மென்ட்ஸ் கம்பெனியில் நுழைந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அவரை சுற்றி பல பிரச்னைகள் வலம் வந்தபடியே இருக்கின்றன. ஒரு பக்கம் கம்பெனி ஓனரின் ஒருதலை காதல், மறுபக்கம் அன்பு அம்மா கம்பெனி சூப்பர்வைசர் என பல பிரச்னைகளை சமாளித்து வருகிறார். மறுபக்கம் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறியிருப்பது அவரது வாழ்வில் பேரிடி ஏற்பட்டுள்ளது. தனது இந்த நிலைக்கு யார் காரணம் என்பதை கண்டறிவதில் கவனம் செலுத்து வரும் ஆனந்தி தனது அக்கா கல்யாணத்திற்காக சொந்த ஊர் வந்திருக்கிறார். 

அக்கா கல்யாணம் நடக்குமா நடக்காதா என்பதும் பிரச்னையாக வெடித்திருக்கிறது. ஆனந்தியின் அக்காவை கடத்தி செல்லும் ஊர் நாட்டாமை பையன் ஆனந்தியை கட்டாயப்படுத்தி காதலித்து திருமணம் செய்துகொள்ள துடிக்கிறார். இந்த நிலையில், ஆனந்தியின் அக்காவை கடத்தி வைத்து ஆனந்தியை திருமணம் செய்ய திட்டமிடுகிறான். ஆனால், இந்த திட்டத்தையெல்லாம் அன்பு தவிடு பொடியாக்குகிறார். அதேநேரத்தில் அக்காவின் திருமணத்தின் போதே ஆனந்தியின் கழுத்தில் தாலி கட்ட துடிக்கும் அன்பு. என பரபரப்புடன் சென்று கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில் ஆனந்தி எதிர்பாராத நேரத்தில் அன்பு அவரது கழுத்தில் தாலி கட்டுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த ஆனந்தியின் பெற்றோர் அதிர்ச்சியடைகின்றனர். மறுபக்கம் ஆனந்தியும் ஷாக் ஆகிறார். அன்புவை ஆனந்தி ஏற்றுக்கொள்வாரா, ஆனந்தியின் பெற்றோர் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையா அல்லது கனவா என்றும் பலரும் சிந்திக்க தொடங்கிவிட்டனர்.