தீபாவளி
இந்திய கலாச்சாரம் என்பது பல்வேறு பண்டிகைகள் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகளைகளில் ‘தீபாவளியும்’ (Diwali) ஒன்று. தீபாவளி நாளில் குடும்பத்தினர், நண்பர்களுடன் பட்டாசு வெடித்து, இனிப்பு, உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வர். தீபாவளி என்ற நன்மையான நாளில் எல்லா வளமும் கிடைக்க வேண்டும் என சிறப்பு வழிபாடு செய்யப்படுவதும் உண்டு. இந்தாண்டு தீபாவளி(Diwali 2024 Date) அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பண்டிகை தினத்தன்று பொதுவிடுமுறை அளிக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் தீபாவளி விரதம் கடைப்பிடிக்கப்படும் வழக்கம் இருக்கிறது.
ஜெயிலர் பட ஸ்டைலில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் போலீஸ்
பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சிங்கப்பூர் காவல் துறை ஒரு ஸ்பெஷலான முறையில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் பட பாணியில் சிங்கப்பூர் போலீஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.