ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சி.ஏ, கம்பெனி செக்ரட்டரி, ஐ.சி.டபிள்யூ.ஏ ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற தனியார் நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தாட்கோ ஆதி திராவிடர் & பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, பட்டயக் கணக்காளர்- இடைநிலை, நிறுவன செயலாளர்- இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்- இடைநிலை ஆகிய போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் கூறி உள்ளதாவது:
தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு பட்டய கணக்காளர்- இடைநிலை (Chartered Accountant-Intermediate), நிறுவன செயலாளர்- இடைநிலை (Company Secretary- Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்- இடைநிலை (Cost and Management Accountant- Intermediate ஆகிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தகுதிகள் என்ன?
* இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
* இப்பயிற்சி பெற விரும்பும் மாணாக்கர்கள் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
* அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
தங்கும் வசதி, உணவு வசதி உண்டு
ஒரு வருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணக்கர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மாணாக்கர்கள் இந்தப் பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com பதிவு செய்யலாம் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: www.tahdco.com