நிறைய படங்கள் வெளியாகி விமர்சனங்களை சந்தித்திருக்கும்; பல படங்கள் எதிர்ப்பை சந்தித்திருக்கும். ஆனால், ஒரே ஒரு படம் தான், ஒட்டுமொத்தமாக அதில் நடித்தவர்களின் கெரியரை காலி செய்ய இருந்தது. காலியும் செய்தது. சர்சை இயக்குனர் என அழைக்கப்படும் இயக்குனர் சாமியின் சிந்து சமவெளி திரைப்படம் தான் அது.
எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர். அவரது மனைவியும், மகனும் கிராமத்தில் இருப்பார்கள். மனைவி டீச்சர். மகன் அதே பள்ளியின் மாணவன். அதே பள்ளியில் படிக்கும் ஏழை விட்டு மாணவியோடு அந்த மாணவனுக்கு காதல். இதற்கிடையில் ராணுவத்தில் அடிபட்டு பணியை முடித்து ஊர் திரும்புகிறார் ராணுவவீரர்.
எதிர்பாராதவிதமாக அவரது மனைவி இறந்து போக, அப்பாவும், மகனும் சிரமப்படுகிறார்கள். இதைத் தொடர்ந்து பள்ளியில் படிக்கும் மகனுக்கு, அவன் விரும்பும் மாணவியை திருமணம் செய்து வைக்கிறார் தந்தை. மகனையும், மருகளையும் பாசத்தோடு வளர்க்கிறார் ராணுவ வீரர். பள்ளியை முடித்து கல்லூரிக்காக வெளியூர் செல்கிறார் மகன்.
இப்போது, மருமகளும், மாமனாரும் தனியாக வசித்து வருகிறார்கள். திடீர் சந்தர்ப்பத்தில் இருவரும் உடலுறவு கொள்ள, அதன் பின் அதுவே தொடர்கிறது. ஒரு கட்டத்தில் கணவரை விட மாமனாரை விரும்புகிறார் அந்த பெண். இருவரும் உல்லாசமாக தனிமையில் வாழ்ந்து வரும் போது, திடீரென கல்வியை முடித்து மகன் ஊர் திரும்புகிறான். இருவரின் செயல்பாட்டில் அவனுக்கு மாற்றம் தெரிகிறது.
மனைவியின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்பதை உணரும் அந்த இளைஞன், தன் தந்தையை என்ன செய்தான் என்பது தான் கதை. மாமனார்-மருமகள் காதலை வைத்து எழுதப்பட்ட கதைக்கு, படம் வெளியானதுமே கடும் எதிர்ப்பு. அதுமட்டுமல்லாமல், படத்தில் இளைஞனாக நடித்த ஹரீஸ் கல்யான், இளம்பெண்ணாக அறிமுகமான அமலாபால் ஆகியோருக்கு அடுத்த படத்திற்கான அனைத்து வாசல் கதவுகளும் அடைக்கப்பட்டது.
மாதர் சங்கங்கள் எல்லாம் பொங்கி எழுந்து போராடினர். பல்வேறு எதிர்ப்புகள், கடுமையான விமர்சனங்கள் என எல்லாமே சர்சை ஆக, எதிர்மறையான தாக்கத்தை சந்தித்தது சிந்துசமவெளி. மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், சுந்தர் சி பாபு இசையில் வெளியான இத்திரைப்படம், 2010 செப்டம்பர் 3 ம் தேதி இதே நாளில் வெளியானது. இன்று