பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாதுகாப்பு வாகனம் கிட்டத்தட்ட விபத்தில் சிக்கியுள்ளது. அவரின் பாதுகாப்பு குழுவை சேர்ந்த கான்வாய் ஒன்று திடீரென தீபிடித்து கொண்டது. தீ பிடித்த வாகனத்திற்கு பின்னே வந்த காரில் தான் இம்ரான் கான் பயணித்துள்ளார். இதையடுத்து, அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.


 






காரில் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்து இன்னும் தகவல் வெளிவரவில்லை. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானின் பாதுகாப்பு வாகனம் ராவத் பகுதி அருகே சாலை விபத்தில் சிக்கியது. இதுபற்றிய செய்தி ஜியோ நியூஸில் சனிக்கிழமை அன்று வெளியாக உள்ளது.


வெள்ளிக்கிழமை காலை பாகிஸ்தான் குஜ்ராத்தில் பொதுக்கூட்டத்தில் பேசியதை தொடர்ந்து வீடு திரும்பி கொண்டிருந்தார் இம்ரான் கான். பின்னர், இம்ரான் கானின் பாதுகாப்பு வாகனம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீப்பற்றி எரிந்த வாகனத்தில் இருந்து மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே குதித்தனர். 


தீப்பிடித்து எரிந்த வாகனத்தின் பின்னே சென்ற காரில் இம்ரான் கான் சென்றதால் அவர் பாதுகாப்பாக உள்ளார். மீட்பு படையினரும் ராவத் காவல்துறை அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.


 






இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். ஓடும் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தீப்பிடித்த வாகனம் இம்ரான் கானின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையின் ஒரு பகுதியாக உள்ளது.