நடிகை சிம்ரன் தனது தங்கை நினைவு நாளையொட்டி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்தப்பதிவில் “நீ என்னுடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்குத்தெரியும் நாம் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று. நீ இறந்து 20 வருடங்கள் ஆனாலும் உன்னில் சிறுபகுதி இன்னும் என்னுள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாங்கள் உன்னை எப்போதும் இழந்து வாடிக்கொண்டே இருக்கிறோம்” என்று பதிவிட்டு இருக்கிறார்
குணால் நடித்த ‘பார்வை ஒன்றை போதும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ராதாமோனல் நாவல். அதனைத்தொடர்ந்து பத்ரி, லவ்லி, சமுத்திரம், சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பிரபல நடிகை சிம்ரனின் தங்கையான இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த சமயத்தில் திரை வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இவருக்கு சிம்ரன் மற்றும் ஜோதி என்ற இரண்டு சகோதரிகளும், சுமித் என்ற சகோதரரும் இருக்கின்றனர்.