வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்தப் படத்தில் சிலம்பரசனுடன் எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பெரும் சிக்கலுக்கு பிறகு வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
நீண்ட நாட்களாக ஒரு பெரிய வெற்றிக்கு காத்திருந்த சிம்புவிற்கு இந்தப் படம் அந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தது. சிம்புவிற்கு வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யாயின் காமெடி கலந்த வில்லத்தனம் மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் படம் வெளியான 3 நாட்களில் மட்டும் 22 கோடி வசுல் செய்ததாக அந்தப்படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் தற்போது நடித்து வரும் ‘பத்து தல’, ‘வெந்து தணிந்தது காடு’ அடுத்ததாக ஒப்புக்கொள்ளும் படங்களில் தனது சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் தான் ஒப்புக்கொண்ட படங்களில் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இனி ஒப்புக்கொள்ளும் படங்களில் சம்பளத்தை உயர்த்துவது சரி, ஆனால் நடித்து வரும் படங்களில் சம்பளத்தை உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம் போன்ற கேள்விகள் திரைத்துறை வட்டாரங்களில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்