நடிகர் சிலம்பரசன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 





விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


 






இப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15  ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 
   
மேலும்  ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இருந்து ஏற்கனவே காலத்துக்கும் நீ வேணும், மறக்குமா நெஞ்சம் ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படத்தின் டீசரும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2-ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.


அப்போது பேசிய சிலம்பரசன், “ நான் நடிகர் கமல்ஹாசனிடம் ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். உங்கள் ரீ மேக் படத்தில் நான் நடிக்க விரும்பினால் அது எந்த படமாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்குறீர்கள்" என்று கேட்டார். இது ரசிகர்களையும் பார்வையாளர்களையும் திகைப்பில் ஆழ்த்தியது. இந்த கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன் " ஒரு படம் மட்டும் அல்ல பல படங்கள் உள்ளன. நீங்கள் நிறைய நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்" என்றார். 






இந்த பதில் அங்கு கூடி இருந்த அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவர்கள் மட்டுமின்றி நடிகர் சிம்புவும் நெகிழ்ச்சி அடைந்தார். கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில் "வெந்து தணிந்தது காடு" படத்தின் இரண்டம் பாகம் நிச்சயம் உண்டு என்பதை உறுதிப்படுத்தினார். அதே போல அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,  “ முதல் காட்சிக்கு வருவோர் நன்றாக தூங்கி விட்டு வாருங்கள். படம் கொஞ்சம் மெதுவாக செல்லும்” என்று பேசியிருந்தார்.