Simbu Movie to Travel: சபாஷ்.. சூப்பர் ஸ்டாரின் ரூட்டை பிடித்த சிம்பு.. எந்த விஷயத்துலன்னு தெரியுமா.?

சூப்பர் ஸ்டாருக்கு ஜப்பானில் பயங்கர ரசிகர்கள் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது சிம்புவும் அந்த நாட்டில் ரசிகர்களை பெறப் போகிறார். ஆம், அவரது படம் ஒன்று அங்கு ரிலீசாகப் போகிறது.

Continues below advertisement

சிம்பு நடிப்பில் உருவான திரைப்படம் ஒன்று ஜாப்பானில் வெளியாகப் போவதாக, படத்தின் தயாரிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அது எந்த திரைப்படம் என்பதை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

சிம்புவுக்கு திருப்புமுனையை கொடுத்த ‘மாநாடு‘ திரைப்படம்

2018-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டு, 2019-ல் சிம்பு நீக்கப்பட்டு, பின்பு சிம்புவால் தேதிகள் ஒதுக்கப்பட்டு, பின்னர் 2020-ல் படப்பிடிப்பு துவங்கப்பட்டு, பின்னர் கோவிட்டால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு, அதன் பின்னர் 2021-ல் முடிக்கப்பட்டு, 2021 நவம்பர் 4-ல் வெளியிட திட்டமிடப்பட்டு... இப்படி பல பட்டுக்களுக்குப் பின், ஒரு வழியாக நவம்பர் 25-ம் வெளியான படம்தான், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த ‘மாநாடு‘ திரைப்படம்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான இந்த படத்தில், சிம்புவுடன், எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், கருணாகரன், பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, அஞ்சேனா கீர்த்தி, உதயா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

முன்னதாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிம்புவிற்கு, டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த படம் பெரும் திருப்புமுனையை கொடுத்தது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிபெற்று, நல்ல வசூலையும் கொடுத்தது. சிம்பு, எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பும் பெரிய அளவிலான பாராட்டுகளை பெற்றன.

ஜப்பானுக்கு போகும் ‘மாநாடு‘ திரைப்படம்

சிம்புவின் மாநாடு திரைப்படம்தான் வரும் மே மாதம் ஜப்பானில் வெளியாகப் போகிறது. இதை உறுதி செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நல்ல படம் என்பது ஓர் அழகிய பறவை போன்றது. அது கண்டங்களை கடந்து நேசிக்கப்படும். இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதையும் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என பதிவிட்டுள்ளார்.

ஜப்பானில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பல திரைப்படங்கள் ரிலீசாகி, சக்கை போடு போட்டு, ஏராளமான ஜப்பானிய ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்தது. தற்போது அவர் வழியில், சிம்புவின் படமும் அங்கு ரிலீசாகிறது. சிம்பு, ஜப்பானிய ரசிகர்களை எந்த அளவிற்கு கர்வகிறார் என்று பார்க்கலாம்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola