Simbu Latest Pics: ப்ளாக் ஜாக்கெட்.. ஒயிட் ஷூ.. மீண்டும் வந்த விண்டேஜ் சிம்பு.. வைரலாகும் புகைப்படங்கள்..!
சிலம்பரசனின் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிலம்பரசனின் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Just In




சிலம்பரசனுக்கு கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத்தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிலம்பரசன் நடித்தார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தில் இருந்து டீசர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன. அவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக பத்து தல படத்தில் நடிக்க அவர் இருக்கிறார். முன்னதாக, கெளதம் கார்த்தியுடனான சிம்புவின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், சிலம்பரசனுக்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வருகிற மே 27-ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும், இந்தப்படப்பிடிப்பை ஜூலை முதல் வாரத்தில் முடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தில் சிலம்பரசனுடன் பிரியா பவானி ஷங்கர், மெட்ராஸ் கலையரசன், டிஜே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருஷ்ணா 15 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்திருக்கிறார்.