டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, தனது தந்தையை போல் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருகிறார். சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார் சிம்பு.


 






நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, நிதி அகர்வால் என பல்வேறு நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார் சிம்பு.  உடல் எடை அதிகரித்ததன் காரணமாக சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சிம்பு, தற்போது ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறிய பின் மீண்டும் நடிப்பில் பிசியாகிவிட்டார்.


தற்போது இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.


 






சிலம்பரசன், வல்லவன் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மற்றொரு படத்தை இயக்க உள்ளதாக ஒரு விளம்பர நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பத்து கதைகள் தயாராக உள்ளதாகவும் அதில் எதை தேர்வு செய்வது என்று முடிவு செய்யவில்லை என்றும் அந்த நிகழ்வில் சிம்பு தெரிவித்து இருந்தார்.


சிம்பு இயக்கிய வல்லவன் படமானது மக்களிடையே வரவேற்பு பெற்றது இந்நிலையில் சிம்பு வெளியிட்ட தகவல் மக்களுடைய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2006 ம் ஆண்டு வல்லவன் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.