நடிகை சில்க் ரொம்ப நல்லவங்க என்று கூறியுள்ளார் கிளாமர் நடிகையாக வலம் வந்த அனுஜா ரெட்டி. கவர்ச்சி நடிகை ஷகிலாவுடனான உரையாடலில் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார். அந்தப் பேட்டியில் இருந்து..


நடிகை சில்க் ரொம்ப நல்லவங்க. அவங்க ரொம்ப மண்ட கர்வமாக நடந்துக்குவாங்க என்றெல்லாம் விமர்சனம் செய்வார்கள். வாழ்க்கையில் அவங்க நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களால் நிறையவே இன்னல்களை அனுபவிச்சிருக்காங்க. அதனால் செட்டில் அவங்க அப்படி கடுமையாக இருப்பாங்க. மற்றபடி அவங்க ரொம்பவே நல்லவங்க தான். அவங்கள மாதிரி ஒரு நபரை நான் பார்த்தது இல்லை. சில்குக்கு மட்டும்தான் கிளாமர் ஆர்டிஸ்ட்களிலேயே பெரிய கிரேஸ் இருந்தது. அவர் நடித்தாலே போதும் என்ற அளவுக்கு அவருக்கு மார்க்கெட் இருந்தது. ஆனால் அவருக்குப் பின்னால் வேறு எந்த ஒரு கிளாமர் ஆர்டிஸ்ட்டுக்கும் அப்படியான மவுசு இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.


தமிழில் நான் பண்ண காமெடி படங்களில் சின்னத்தம்பி, சேரன் பாண்டியன் தான் பெரிதாக அறியப்படுகிறது. தெலுங்கு, கன்னடத்திலும் சின்னத்தம்பி ரீமேக் நடித்தேன். அதிலும் எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 


அந்தக் காலம் கிளாமர் ஆர்டிஸ்ட்டுக்கும் இந்தக் கால நடிகைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அந்தக் காலத்தில் ஐட்டம் சாங், சோலோ சாங் எல்லாம் சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி போன்றோர் செய்வார்கள். இப்போதெல்லாம் டாப் ரேஞ்ச் ஹீரோயின்களே கிளாமர் சாங்கும் செய்கிறார்கள். அதனால் அந்த வித்தியாசம் இப்போது இல்லாமல் போய்விட்டது. அது போலவே வடக்கே இருந்தும் வரும் நடிகைகள் தாராளம் காட்டுவதாலேயே அவர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கிறது. தமிழில் இருப்பவர்கள் நிறைய பேர் இன்னும் சினிமா துறையில் தீவிர ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் தான் வடக்கிலிருந்து வருபவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.


என்னதான் நான் கிளாமர் நடிகையாக இருந்தாலும் கூட சில காட்சிகளை இப்போது பார்க்கும் போது அதை நான் செய்திருக்கக் கூடாது என்று தோன்றுவது உண்டு. தெலுங்கில் ஒரு படத்தில் காமெடி ப்ளஸ் க்ளாமர் ரோலில் இருப்பேன். ஒரு சீனில் தேவையே இல்லாமல் என்னை ஒருவர் மடியில் உட்கார வைத்து ஷாட் எடுத்திருப்பார்கள். அதை யூடியூபில் இப்போது பார்த்தாலும் கூட சங்கடமாக இருக்கும். இதுதான் கிளாமர் நடிகையின் மறுபக்கம்.


காமெடி நடிகர்கள் என்றால் எனக்கு முதலில் கவுண்டமணி, செந்தில் தான் இஷ்டம். அப்புறம் தான் எனக்கு வடிவேலு சார் பிடிக்கும். ஆனால் வடிவேலு சாருக்கு நிறைய திறமைகள் இருக்கின்றன. நடிப்பு தொடங்கி பாட்டு வரை அவர் அசாத்திய திறமைசாலி. அவருடன் நான் இரண்டு மூன்று படங்களில் நடித்துள்ளேன். நான் க்ளாமர் நடிகையாக அறியப்பட்டாலும் நிறைய காமெடி ரோல் பண்ணியிருக்கிறேன். எனக்கு வில்லி ரோல் செய்ய வேண்டும் என்ற ஆசை உண்டு.


குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களை சவுதியில் தண்டிப்பது போல் கொடூரமாக தண்டிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவர்களை ஆண் குறியை துண்டித்து பின்னர் கல்லால் அடித்துக் கொள்ள வேண்டும்.


கிளாமர் நடிகை என்றாலே கிசுகிசுக்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் என்னை கவுண்டமணி சாருடன் சேர்த்து கிசுகிசு பேசினர். அதைப் பார்த்து நான் சிரித்துக் கொள்வேன்.


இவ்வாறு அனுஜா ரெட்டி சுவாரஸ்யமாக பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்