நடிகர் சிலம்பரசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசிய பழைய வீடியோ ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைப் பற்றி காணலாம். 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் சிலம்பரசன். நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசியர், இயக்குநர் என பல திறமைகளை தன்னுள்ளே கொண்டுள்ளார். கடைசியாக சிம்பு நடிப்பில் பத்து தல படம் வெளியானது. இதனையடுத்து அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வந்த சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. 


இப்படியான நிலையில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசிய பழைய வீடியோ ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட அந்த வீடியோ 2007 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான “காளை” படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது. தருண் கோபி இயக்கிய அந்த படத்தில் வேதிகா, சங்கீதா, லால், சந்தானம் என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இயக்கிய அப்படம் படுதோல்வி அடைந்தது. 


வீடியோவில் பேசியது என்ன? 


அந்த வீடியோவில், “சினிமாவில் ஏகப்பட்ட வேலை இருக்கு. படத்தில் நாங்கள் வசனம் பேசும்போது நேரடியாக அந்த குரல் வந்து விடாது. நாகரா என்ற கருவி உள்ளது. அதில் இருக்கும் மைக் மூலமாக நாங்கள் பேசும் வசனம் ரெக்கார்ட் பண்ணி எடிட்டிங் ரூமுக்கு வந்து விடும். அங்கு இந்த குரலையும், அந்த காட்சியையும் ஒன்றாக மாற்றி அதை போட்டு பார்த்து எடிட் பண்ணி, அதன்பிறகே டப்பிங்கிற்குள் செல்வோம். படத்துல ஷூட்டிங் எடுக்கும்போது சம்பந்தப்பட்ட நபருக்கு அருகில் அந்த மைக் பொருத்தப்பட்டிருக்கும்.






மணி ரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் பற்றி சொல்கிறேன். அதில் கல்யாணம் செய்ய ஷாலினியும்,ஸ்வர்ணமால்யாவும் வீட்டை விட்டு வெளியே செல்வார்கள். அப்போது அவரது அப்பா கிரவுண்டில் இருந்து வந்து எங்கம்மா போறீங்க என கேட்பார்.அப்போது அந்த மைக் உள்ளே வந்து போகும். அது தான் நாகரா மைக்” என சிலம்பரசன் பேசியிருப்பார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதனிடையே 2018 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் 4 ஹீரோக்களில் ஒருவராக சிலம்பரசனும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Kagney Linn: 36 வயதில் தற்கொலை.. பிரபல பார்ன் நடிகை எடுத்த விபரீத முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!