நடிகர் சிலம்பரசன் நடிக்கும்  ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியான அதனை படத்தின் இயக்குநர் கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.     



நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் சிம்பு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு வெளியான மாநாடு படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் சமீபத்தில் மஹா படம் வெளியாகியிருந்தது. இதனையடுத்து சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இதில் கௌதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. 


இதனையடுத்து மற்றொரு படமான பத்து தல படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படம் டிசம்பர் 14 அன்று வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்து இருந்தது. 




இதற்கிடையில் உடல் நலக்குறைவால் தந்தை டி.ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால் பத்து தல படத்தின் சிம்புவின் காட்சிகள் படமாக்குவது தாமதமானது.சமீபத்தில் சென்னை திரும்பிய அவர் கடந்த மாத இறுதியில்  ‘பத்து தல’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக பத்து தல படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என இரு புகைப்படங்களை வெளியிட்டு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி சிம்பு அப்டேட் வழங்கினார். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நடைபெற்று வந்த ‘பத்து தல’  படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக இயக்குநர் கிருஷ்ணா சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் உடன் இருக்கும் புகைப்படங்களை வெ ளியிட்டார்.


 






இதனிடையே சிலம்பரசன் ஷூட்டிங்கில் இருந்து பாதியில் கிளம்பியதால்தான் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத்தகவலை படத்தின்  இயக்குநர் கிருஷ்ணா மறுத்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.


இயக்குநர் கிருஷ்ணா விளக்கம் 


அந்த விளக்கத்தில், “ சிலம்பரசன் நடிக்க இருக்கும் காட்சிகளோடுதான் படத்தை ஆரம்பித்தோம். ஆனால் அங்கு கடுமையான மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. அதனால் அங்கு ஷூட்டிங்கே செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அதனால் ஷூட்டிங்கிற்கு 10 நாட்கள் பிரேக் விட்டு இருக்கிறோம். ஆனால் அங்கு இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கிறது. இதனால் இந்த இடைப்பட்ட நேரத்தில் மதுரை மற்றும் கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அடுத்ததாக 25 ஆம் தேதி மதுரையில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.


இதன் மூலம், நிலவி வந்த சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இயக்குனர்.