வியாசர்பாடி சாமியார் தோட்டம் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவருக்கு வயது 41. இவரது மனைவி வேதவல்லி. அவருக்கு வயது 33. இந்த தம்பதியினருக்கு கடந்த 10 ஆண்டுகளுக் முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.


இந்த நிலையில், வேதவல்லியை பார்ப்பதற்காக அவரது அக்கா அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அங்கே வேதவல்லி சடலமாக வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேதவல்லியின் அக்கா வேதனையில் கதறியுள்ளார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளித்து வேதவல்லியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.





போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. போலீசார் வேதவல்லியின் வீட்டில் சோதனை செய்தபோது, அங்கே வேதவல்லியின் டைரி கிடைத்தது. அந்த டைரியில் அவர் எழுதியிருப்பதாவது“ என் சாவுக்கு என்னுடன் வேலை பார்த்து வந்த தரணிராஜன் என்பவர்தான் காரணம்” என்று எழுதி வைத்துள்ளார். மேலும், தற்கொலை கடிதம் ஒன்றையும் வேதவல்லி எழுதி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.


அந்த கடிதத்தில், “ என்னுடன் அன்பாக பேசி பழகி வரும் எனது கணவருக்கு துரோகம் செய்துவிட்டேன். எனக்கு பிறந்த இரண்டாவது குழந்தை எனது கணவருக்கு பிறக்கவில்லை. என் சாவுக்கு காரணமான தரணிராஜனை விட்டுவிடாதீர்கள்” என்று எழுதியுள்ளார்.   




இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் வேதவல்லி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் தரணிராஜனும் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வேதவல்லியுடன் தரணிராஜன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தரணிராஜன் பேசாமல் போனதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிய வேதவல்லி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. போலீசார் தற்போது திருவள்ளூரைச் சேர்ந்த தரணிராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் தரணிராஜன் அந்த குழந்தை தன்னுடைய குழந்தை இல்லை என்று கூறிவருவதால், இந்த வழக்கில் பரபரப்பு நீடித்து வருகிறது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.





மாநில உதவிமையம் : 104




சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண