“தி வாரியர்” புரமோஷன் பணிகளின் நடுவே ராம் பொத்தினேனி, நடிகர் சிலம்பரசனை சென்னையில் சந்தித்தார்
தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனியின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இருமொழிப் படமான ‘ தி வாரியர்” திரைப்படம் ஜூலை 14 அன்று வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார் ராம் பொத்தினேனி. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை பிரபல இயக்குநரான லிங்குசாமி இயக்கி இருக்கிறார். இந்தப்படத்தின் பிரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நடிகர் சிலம்பரசன் ராம் பொத்தினேனியை சந்தித்து பேசியுள்ளார்.
இருவரும் மகிழ்ச்சியுடன் சிறிது நேரத்தை பகிர்ந்துகொண்டனர். அந்த புகைப்படம் இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நண்பரான ராம் பொத்தினேனி கேட்டுக்கொண்டதன் பேரில், சிலம்பரசன் வாரியர் படத்தில் புல்லட் பாடலை பாடினார். இந்தப்பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
Srinivasaa Silver Screens தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சிட்தூரி தயாரித்துள்ள இந்தப்படத்தில் ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்தில் நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்