‘வெந்து தணிந்தது காடு’  படத்தின் 2 நாள் வசூல் குறித்த விவரங்கள்வெளியாகியிருக்கின்றன.  


விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3 வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள  இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார்.


 






விநியோக உரிமையை உதயநிதியின்  ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் படத்தில் சிலம்பரசனின் நடிப்பும், ஏ.ஆர்.ஆரின் இசையும் பெரிதளவில் பாராட்டைப் பெற்று வருகிறது.


 






இந்த நிலையில் இந்தப்படத்தின் வசூல் குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி படம் வெளியாகி இரண்டாம் நாள் முடிவில் படம் ரூ.19.37 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதல் நாளில் 10.86 கோடியும், இரண்டாம் நாளில் 8.51 கோடியும் வசூல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இசை வெளியீட்டு விழாவில் சிலம்பரசன் பேசியது


சிலம்பரசன் பேசும் போது “ நான் நடிகர் கமல்ஹாசனிடம் ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். உங்கள் ரீ மேக் படத்தில் நான் நடிக்க விரும்பினால் அது எந்த படமாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்குறீர்கள்" என்று கேட்டார். இது ரசிகர்களையும் பார்வையாளர்களையும் திகைப்பில் ஆழ்த்தியது. இந்த கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன் " ஒரு படம் மட்டும் அல்ல பல படங்கள் உள்ளன. நீங்கள் நிறைய நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். என்னுடனும் நடிக்க வேண்டும்.” என்றார். இந்த பதில் அங்கு கூடி இருந்த அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவர்கள் மட்டுமின்றி நடிகர் சிம்புவும் நெகிழ்ச்சி அடைந்தார்.