வல்லவன்


சிலம்பரசன் , நயன்தாரா, ரீமா சென், சந்தியா, எஸ், வி சேகர், பிரேம் ஜீ சந்தானம் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 2006 ஆம ஆண்டு வல்லவன் திரைப்படம் வெளியாகியது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்தார்.ஆர்.டி ராஜசேகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


கதை


ஸ்வப்னா ( நயன்தாரா) என்கிற தனது கல்லூரி ஆசிரியை காதலிக்கிறார் அதே கல்லூரியில் மாணவனாக இருக்கு வல்லவன்( சிம்பு) . எப்படியோ கமலின் ஜப்பானில் கல்யாண ராமன் கெட் அப் போட்டு நயன்தாராவை காதலிக்க வைத்துவிடுகிறார். ஆனால் தன்னுடைய வயதைத் தெரிந்துகொண்ட ஸ்வப்னா அவரிடம் இருந்து பிரிந்து போகிறார். இந்த கேப்பில்தான் என்ட்ரி கொடுக்கிறார் கீதா (ரீமா சென்) . வல்லவனின் பள்ளி காலத்தில் அவரை காதலித்து தன்னுடைய அத்தனை டாக்சிக் தன்மைகளையும் வெளிப்படுத்துகிறார். ஓரளவிற்கு மேல்தான் பொறுமையாக இருல்போம் அதற்குமேல் செய்ய வேண்டியதை செய்வோம் என்பது போல் கீதாவை விட அழகான ( சிம்பு வர்ணிக்கும்போது ஏனோ அவ்வளவு ஆபாசமாக இருக்கும்) பெண்ணை கல்யானம் செய்துகொள்வதாக சவால் விடுகிறார். கீதா ரீ எண்ட்ரி கொடுக்க ஸ்வப்னா வல்லவனை வெறுக்க இரண்டுக்கும் நடுவில் யம்மாடி ஆத்தாடி என்று குத்தாட்டம் போடுகிறார் சிம்பு.

அஜித் நடித்த வரலாறு படத்துக்கு போட்டியாக ரிலீஸான வல்லவன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. யுவன் ஷங்கர் ராஜா வின் இசையில் அமைந்த அனைத்துப் பாடல்களுக்கும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. ரீமா சென் இன் நடிப்பு, சந்தானத்தின் காமெடி, ரசிகர்களை கவர்ந்தது. 


லூசுப் பெண்ணே


குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற லூசுப்பெண்ணே பாடல் ஒருதலை காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த பாடல் உருவான விதம் குறித்து நடிகர் சிம்பு தெரிவிக்கையில், ”`மன்மதன்’ படத்தில் வந்த `காதல் வளர்த்தேன்’ பாடல் மிகப்பெரிய ஹிட்.. அதனால் மக்கள் அதேபோன்ற பாடலை எதிர்பார்ப்பார்கள் என யுவன் சாரிடம் சென்று சொன்னேன். `என்ன பண்ணலாம்?’ எனக் கேட்டேன்.. `பண்ணிடலாம்’ என்றார்.. அந்த காட்சியின் சிச்சுவேஷனை அவரிடம் விவரித்தேன். பிறகு பாடலைத் தொடங்கினோம்.. முதலில் அந்தப் பாட்டுக்கு `காதல் வராதா’ என்று தொடக்கம் வைத்திருந்தோம்.. `என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா?’ என்று எழுதினேன். `காதல் வளர்த்தேன்’ மாதிரியே, `காதல் வராதா?’ என்பது புதிதாக இருக்கும் என யுவன் சாரிடம் தெரிவித்தேன்.. அவரும் ஏற்றுக் கொண்டார்.. `காதல் வளர்த்தேன்’ பாடலில் `ஏ புள்ள புள்ள புள்ள’ என்று பாடியிருப்பேன். காதலிக்கும் பெண்ணை எப்படி அழைப்பது என்பதை அதற்காக யோசித்தோம்... நான், யுவன் சார், உதவி இயக்குநர்கள் என ஸ்டூடியோவில் சுமார் 15 பேர் ஷூட்டிங் முடித்துவிட்டு வந்திருந்தோம். இதனைத் தொடர்ந்து  பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு என்னுடைய காதலியை நான் லூசு என்று தான் அழைப்பேன் என்று யுவனிடம் சொன்னேன். அப்படிதான் இந்த பாடல் உருவானது“ என்று கூறியுள்ளார்.