SIIMA விருதுகள் என்று பிரபலமாக அறியப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் தென்னிந்திய திரைப்படத் துறையின் கலை மற்றும் தொழில்நுட்ப சாதனைகளுக்காக கௌரவப்படுதும் விழாவாகும். இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்பட திரையினர் கலந்துகொள்கின்றனர்.


இந்த விருது வழங்கும் விழா கடந்த ஜூன் 2012 இல் விஷ்ணு வர்தன் இந்தூரி மற்றும் பிருந்தா பிரசாத் அடுசிமில்லி ஆகியோரால் தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் தென்னிந்திய திரைப்படங்களில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 


இந்த ஆண்டு, SIIMA விருதுகள் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது செப்டம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் விருது வழங்கும் விழாவில் தென்னிந்திய தொழில்துறையின் பல பிரபலங்கள் மற்றும் ஏராளமான மக்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். 






இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டின் பிரபலமான தமிழ் திரைப்படங்களில், தனுஷ் நடித்த கர்ணன், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் கங்கனா ரனாவத் நடித்த தலைவி ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளனர். 






அதேபோல், சிறந்த அறிமுக நாயகனாக ’தீதும் நன்றும்’ பட இயக்குநர் மற்றும் நடிகருமான ராசு ரஞ்சித் விருது பட்டியலில் தேர்வாகியுள்ளார். அதே பிரிவில், ’திட்டம் இரண்டு’ நாயகன் சுபாஷ் செல்வன், ’மேதகு’ திரைப்பட நாயகன் குட்டி மணி, ’கடைசியில பிரியாணி’ நாயகன் வசந்த் செல்வம், ’கயமை கடக்க’ நாயகன் வாட்சன் எம். நடராஜன் ஆகியோரும் இந்த பட்டியலில் தேர்வாகியுள்ளனர். 


சிறந்த திரைப்படங்கள் : 






மிகவும் பிரபலமான திரைப்பட விருதுகள் :