தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்தார்த். சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ட்விட்டரில் செம ஆக்டிவ். சினிமா தொடர்பான செய்திகள் தவிர்த்து அரசியல் பார்வையும் இவருக்கு அதிகம். பொதுவாக நடிகர்கள் தலையிட தயங்கும் பல விஷயங்களிலும் கூட துணிச்சலாக தனது கருத்துக்களை பதிவிடுவார். நடிப்பை தாண்டி தனது பளீச் பதிலால் பலரை தன்வசப்படுத்தியவர். இந்நிலையில் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்ட ஒரு ட்வீட் ஒன்றை இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. One of the first lessons I learnt from a teacher in school..."Cheaters never prosper." What's yours? “ என பதிவிட்டுள்ளார். அதாவது நான் பள்ளிக்கூடத்தில் என் ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட ஒரே பாடம் “ ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள் “ என்பதுதான். நீங்கள் எப்படி “ என ஷேர் செய்ய, சொல்லவா வேண்டும் நெட்டிசன்களுக்கு, சமந்தாவின் புகைப்படத்தை கீழே பகிர்ந்து பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலரோ சித்தார்த்திற்கு அறிவுரை கூறி வருகின்றனர். ரசிகர் ஒருவர் ” இந்த ட்வீட் முன்னாள் காதலி மீது இருக்கும் வன்மத்தை காட்டுகிறது. அவர் உங்களின் முன்னாள் காதலி மற்றும் நாக சைத்தன்யாவின் முன்னாள் மனைவியாக இருப்பதால் ஏமாற்றும் பெண் என அர்த்தம் கிடையாது.அவர் துணிச்சலான, சொந்தக்காலில் நிற்கும் பெண் “ என காட்டமாக தெரிவித்துள்ளார்
சமந்தா மற்றும் நாகசைத்தன்யா இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து அதே நாளில் சித்தார்த் பதிவிட்ட இந்த பதிவும் வைரலாகி வருகிறது. பொதுவாகவே திரை பிரபலங்கள் ஏதாவது சாதரணமாக ட்வீட் செய்தாலே அது வேறு மாதிரியான கோணத்தில் பரவி விடுவது வழக்கம்தான். ஆனாலும் சித்தார்த் தவறாக , அல்லது வேறு கோணத்தில் கருத்து பதிவிடுபவர்கள் யாராக இருந்தாலும் , துணிச்சலாக திட்டியும் கூட ரிப்ளை கொடுப்பவர். ஆனால் இந்த விஷயத்தில் சித்தார்த் மௌனம் காப்பதுதான் சமந்தாவை சாடியுள்ளாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா மற்றும் சித்தார் ஆகியோர் முன்னதாக காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தார்த் தற்போது டக்கர், சைத்தான் கி பச்சா ஆகிய படங்களை முடித்துள்ளார். அவை வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன. மேலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மகா சமுத்திரம் என்ற திரைப்படம் மூலம் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் கால் பதிக்கவுள்ளார் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது.