Just In





Siddharth - Aditi Rao Hydari : 400 ஆண்டுகள் பழமையான கோயில்...மணிரத்னம் ஸ்டைலில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் சித்தார்த் அதிதி
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் 400 ஆண்டுகள் பழமையான கோயிலில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்கள்

சித்தார்த் - அதிதி
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதேபோல் அவர் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் ஒன்றாக இணைந்து 2021 ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'மகா சமுத்திரம்' திரைப்படத்தில் நடித்திருந்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு டேட்டிங் வரை சென்றது. எந்த ஒரு பொது நிகழ்ச்சியாக இருந்தாலும், ஈவென்ட்டாக இருந்தாலும் சேர்ந்தே காணப்பட்டனர். ஒருவரையொருவர் டேக் செய்து சோசியல் மீடியாவில் போட்டோ போஸ்ட்களை பகிர்ந்து வந்தனர். இருப்பினும் அவர்கள் இருவர் இடையே இருக்கும் உறவு குறித்த வெளிப்படையாக காதலை தெரிவிக்காமல் இருந்தனர்.
அதிதிக்கு ப்ரோபோஸ் செய்த சித்தார்த்
அதிதி தனது பாட்டிக்கு ரொம்ப நெருக்கமானவர். அவரது பாட்டிக்கு சொந்தமான பள்ளிக்கூடம் ஒன்று ஹைதராபாதில் இருந்துள்ளது. அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என சித்தார்த் அதிதியிடம் கேட்டுள்ளார். அங்கு சென்று சித்தார்த் அதிதியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் தங்களது நெருங்கிய குடும்பத்தினர் மத்தியில் நிச்சயம் செய்துகொண்டார்கள் . தங்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதை சித்தார்த் இயக்குநர் மணிரத்னமிடம் தெரிவித்தபோது ‘ உன்னோடு வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல விஷயம் இதுதான்’ என மணிரத்னம் பதிலளித்துள்ளார். தங்கள் காதல் உறவைக் குறித்து நடிகை அதிதி தெரிவித்தபோது “ நாங்கள் இருவரும் சின்ன வயதில் சந்தித்திருந்தால் கூட நாங்கள் காதலித்திருப்போம்’ என்று கூறியுள்ளார்
400 ஆண்டு பழமையான கோயிலில் திருமணம்
சமீபத்திய பிரபல இதழ் ஒன்றுக்கு சித்தார்த் மற்றும் அதிதி தங்கள் காதல் உறவைப் பற்றி நிறைய தகவல்களைப் பற்றி பகிர்ந்துகொண்டார்கள். அப்போது நடிகை அதிதி ஹைதராபாத்தில் பெரிய ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவராம். இவர்களுக்கு குடும்பம் வழிபட்டு வந்த 400 ஆண்டுகள் வனர்பதி கோயில் உள்ளதாம். இந்த கோயிலில் தான் சித்தார்த் மற்றும் அதிதியின் திருமணம் நடைபெற திட்டமிடப் பட்டிருப்பதாக அதிதி தெரிவித்துள்ளார்.