அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் உருவாகிவரும் அருண் விஜய் 31 படத்தின் First look போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படக்குழு அறிவித்தது போல நேற்று இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது குறிப்படத்தக்கது. All in pictures தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜயுடன் ஜோடி சேர்கிறார் பிரபல நடிகை ரெஜினா கசாண்ட்ரா. 








பார்டர் (Borrder) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்ட்டரை பகிர்ந்து தனது வாழ்த்துக்களை அருண்விஜய்க்கு தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் சிபி சத்யராஜ். இறுதியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான மாஃபியா சாப்டர் 1 படத்தில் நடித்த அருண்விஜய் தற்போது நான்கு திரைப்படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்படத்தக்கது.