கடந்த மார்ச் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டு (wholesale price) எண்ணை மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அனைத்து பொருட்களுக்குமான (2011-12=100 அடிப்படையாகக் கொண்டது) மார்ச் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டெண் 129.3 ஆக இருந்தது. 


மாதந்தோறுமான மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கான வருடாந்திர பணவீக்க விகிதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு மார்ச் மாதத்திற்கான வருடாந்திர பணவீக்கம் 7.39 % ஆக அதிகரித்தது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத பணவீக்க அளவு என்று தெரிவிக்கப்படுகிறது. 




 


முன்னதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), 2012=100 என்ற அடிப்படையில் கிராமப்புறம், நகர்ப்புறம், மற்றும் இரண்டும் இணைந்தவற்றுக்கான 2021-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்களை வெளியிட்டது.


பணவீக்க விகிதங்களை (All India Inflation rates) நுகர்வோர் விலைக் குறியீட்டின் (பொது) அடிப்படையில் சதவீதத்தில் கணக்கிட்டபோது, மார்ச் மாதத்தில் (தற்காலிகம்) கிராமப்புறங்களில் 4.61 ஆகவும், நகரங்களில் 6.52 ஆகவும், இரண்டும் இணைந்து 5.52 ஆகவும் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது.